எந்த சீசனிலும் இல்லாத பல புதிய ரூல்ஸ்கள் இந்த பிக் பாஸ் சீசனில் அறிமுகப்படுத்தப்பட்டன என்பது அனைவரும் அறிந்ததே. வழக்கமாக கமல்ஹாசன் சொல்வது போல் எதிர்பாராததை எதிர்பார்க்கச் செய்ய இப்படியான ஒரு புதிய முயற்சியை செய்தனர். அதில் ஒன்று தான் ஓப்பன் நாமினேஷன். kamalhassan cancelled open nomination
முந்தைய சீசன்களில் நாமினேஷனைப் பற்றி பேசுவதே பெரிய விதி மீறலாக பார்க்கப்பட்டது. அதனால், முந்தைய சீசன்களில் ஒரு சுவாரஸ்யமும் இருந்தது. ஆனால், இந்த சீசனில் அது இல்லாததால், அனைவரும் கூட்டு சேர்ந்து குழுவாய் ஒருவரை குறிவைத்து தாக்குவது சகஜமாகிவிட்டது. இதை அடக்கும் விதமாக அந்த சலுகை இந்த சீசனில் இனி இல்லை என இன்றைய எபிசோடில் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
புதிய முடிவுகளை எடுப்பதின் முக்கியம் குறித்து மக்களிடம் அட்வைஸ் செய்துவிட்டு அகம் டிவி வழியே அகத்திற்குள் சென்ற கமல்ஹாசன், இந்த வாரம் வைல்டு கார்டு எண்ட்ரீயாக வந்தவர்களிடம் வீட்டை குறித்து விசாரித்தார். அதில், இந்த வாரம் முழுக்க அழுகை திருவிழா நடத்திய அர்ச்சனா, ‘வந்ததுமே ஸ்மால் பாஸ் வீட்டுல போட்டுடாங்க சார். நான் வீட்டையே சுற்றி பார்க்கல’ என புகார் அளிக்க, ’நீ வீட்டை சுற்றி பார்க்க ஒன்னும் பிக் பாஸ் வரலம்மா’ என்பதை சூசகமாக சொன்னார் கமல்ஹாசன். மேலும், ‘பாவற்காய் அல்வா’ டாஸ்க் என புதிய டாஸ்கை ஹவுஸ்மேட்ஸை செய்யவிட்டு, அவரவருக்கு பிடிக்காத நபர்களிடம் அதை வழங்கச் சொன்னார்.
அதில், பூர்ணிமாவுக்கும் மாயாவுக்கும் அதிகமான பாவற்காய் அல்வா கிடைத்தது. ஆனால் அதை விட விஷ்ணுவுக்கு நிறைய லட்டு கிடைத்ததை பூர்ணிமா மற்றும் மாயாவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ‘இவர் ஒன்னும் அவ்வளவு நல்லவர் இல்ல சார்!’ என விஷ்ணுவை கலாய்க்க, ‘நான் அவங்களுக்கு ஜிங்சாங் போடலங்கிற கடுப்புல பேசுறாங்க சார்’ என பதிலடி கொடுத்தார் விஷ்ணு.
எது எப்படியோ இந்த வாரம் திட்டம்போட்டது போல் கமலிடம் நல்ல பேர் வாங்கிவிட்டோம் என்று விஷ்ணு பெருமூச்சு விட்டது இந்த டாஸ்கில் தெரிந்தது. இந்த டாஸ்க் முடிந்த பிரேக்கில் மீண்டும் தன் அழுகை திருவிழாவை தொடங்கினார் அர்ச்சனா. ‘நான் இப்படி இருக்க விரும்பல, நான் வீட்டுக்கே போறேன்’ என கேமராவைப் பார்த்தே கேட்க ஆரம்பித்து விட்டார். பிக் பாஸை ஏதோ விஜய் டிவியின் காமெடி ஷோ என நினைத்து உள்ளே வந்துவிட்டார் போலும்.
பிரேக் முடிந்து வந்ததும் பூர்ணிமாவின் கேப்டன்சி குறித்து தனது விசாரணையை தொடங்கினார் கமல். பூர்ணிமாவை கொஞ்சம் வறுத்தெடுத்தார் என்றே சொல்ல வேண்டும். ’இரண்டாவது முறை கேப்டன் ஆனதால் மமதை ஏறிவிட்டது, இப்படிப் பட்ட தலைமை வீட்டிற்கும் நல்லது அல்ல, நாட்டிற்கும் நல்லது அல்ல’ என தனது வழக்கமான அரசியல் குத்தையும் கமல்ஹாசன் குத்தினார்.
விளையாட்டை வித்தியாசமாக்க ஓப்பன் நாமினேஷன் என உங்களுக்கு சலுகை தந்தால், அதில் சுவாரஸ்யம் இல்லாமல் செய்கிறீர்கள் என கமல் சொன்னது நியாயமான ஒரு கருத்தே. மேலும், இந்த சலுகையை ரத்து செய்ததும் சரியான முடிவு.
’உங்களைப் போல் நானும் சுவாரஸ்யம் இல்லாமல் இந்த வாரம் யார் எவிக்ட் ஆனார் என்பதை இழுத்தடித்து சொல்ல மாட்டேன்’ என அன்னபாராதி தான் என உடனே கார்டை காட்டினார் கமல். அந்த முடிவு மக்களுக்கு ஏற்கனவே தெரிந்தது என்பதால் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என கமல் நினைத்திருக்கக் கூடும்.
எவிக்ஷன் முடிந்ததும் கமல்ஹாசனின் பிறந்த நாளுக்கான சிறப்பு ராப் பாடல் நிக்ஷனால் பாடப்பட்டது. பிரதீப்பின் வெளியேற்றம், புதிய ரூல்ஸ் மாற்றம் என பல்வேறு மாற்றங்கள் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் மாற்றப்பட்டது ஹவுஸ்மேட்ஸ் மத்தியில் பல திருப்பங்களை ஏற்படுத்தலாம் என்றே தெரிகிறது.
வீட்டில் விசித்ரா மட்டுமே பிரதீப்பிற்கான சாஃப்ட் கார்னரை தற்போதும் தக்கவைத்தபடி உள்ளார். ஆனால், எபிசோடின் முடிவின் போது ‘நான் பூர்ணிமாவுக்கு பாவற்காய் அல்வா டாஸ்கில் லட்டு கொடுத்திருந்தால், மக்கள் என்னையும் பூர்ணிமாவையும் ஜோடி சேர்த்து பேசிருப்பார்களோ’ என ஆர்.ஜே.பிராவோ கூறிய கருத்து, வீட்டிற்குள் ஓவராக யோசிக்கும் மற்றொரு பிரதீப் உருவாகிறாரோ என எண்ணத் தோன்றியது. kamalhassan cancelled open nomination
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
ஷா
பியூட்டி டிப்ஸ்: ஃபேஷியல் செய்வது உண்மையிலேயே பலனளிக்குமா?
கிச்சன் கீர்த்தனா: பனீர் சீஸ் பால்ஸ்!