யுஏஇ செல்லும் பிரதமர்! Top 10 News Tamil today February 13 2024
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு இரண்டு நாள் அரசு முறை பயணமாக இன்று (பிப்ரவரி 13) செல்லும் பிரதமர் மோடி அபுதாபியில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயணன் கோவிலை திறந்து வைக்கிறார்.
விவசாயிகள் மெகா பேரணி!
டெல்லி போலீசாரின் கடும் தடுப்புக்கு மத்தியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று டெல்லி நோக்கி மெகா பேரணி நடைபெற உள்ளது.
வெற்றியின் உடல் இன்று தகனம்!
சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனும், இயக்குநருமான வெற்றி துரைசாமியின் உடல் இன்று மாலை 6 மணியளவில் தகனம் செய்யப்படுகிறது.
அமைச்சர் மீதான வழக்கு விசாரணை!
முறைகேடாக வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை ஒதுக்கியதாக அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம்!
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளரை நீக்க கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் (எஸ்எப்ஐ) இன்று போராட்டம் நடத்துகின்றனர்
ஆம் ஆத்மி ’பிஏசி’ கூட்டம்!
நாடளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கான வாய்ப்புகள் குறித்து விவாதிக்க ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழு (பிஏசி) கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.
சபரிமலை கோயில் நடை திறப்பு!
கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாசி மாத பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்!
விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக மண்டல மையம் மற்றும் உறுப்பு சமுதாயக் கல்லூரியுடன் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெறும் என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
பூக்கள் விலை உயர்வு!
உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று ரோஜா பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
நியூசிலாந்துvsதென்னாப்ரிக்கா!
ஹாமில்டன் செடான் பார்க் மைதானத்தில் நியூசிலாந்து – தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.30க்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 633வது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்து அல்வா!
சைதை துரைசாமி மகன் வெற்றி மறைவு: ஸ்டாலின், எடப்பாடி இரங்கல்!
Top 10 News Tamil today February 13 2024