அல்வா என்றாலே ஆசையாகச் சுவைக்க தோன்றும். கறுப்பு உளுந்தில் செய்யப்படும் இந்த அல்வா ருசிக்கு மட்டுமல்ல… ஆரோக்கியத்துக்கும் ஏற்றது. கறுப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம். இது செரிமான உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பதால் அனைவருக்கும் ஏற்றது.
என்ன தேவை?
கறுப்பு உளுந்து – ஒரு கப்
வெல்லம் – ஒரு கப்
நெய் – முக்கால் கப்
நல்லெண்ணெய் – முக்கால் கப்
எப்படிச் செய்வது?
கறுப்பு உளுந்தை வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும். இதை ஆறவைத்து மிக்ஸியில் பவுடராக்கவும். நன்கு அரைபட்டதும் வெல்லத்தையும் இதனுடன் சேர்த்து ஒன்றாகப் பொடித்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் அரைத்த இந்தக் கலவையுடன் தண்ணீர் சேர்த்து இட்லி மாவுப் பதத்துக்குக் கலந்துகொள்ளவும். பின்னர் வாணலியில் நெய் சேர்த்துச் சூடாக்கி மிக்ஸியில் அரைத்துவைத்திருக்கும் உளுந்து கலவையை சேர்த்து நன்கு கிளறவும். இடையிடையில் எண்ணெய் சேர்த்து அல்வா கையில் ஒட்டாதவரை கிளறவும். பின்பு நெய்யும் எண்ணெயும் பிரிந்து சுருண்டு வரும்வரை கலவையை நன்கு கிளறி இறக்கவும். சுவையான அல்வா தயார்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : முட்டைகோஸ் பகோடா
கிச்சன் கீர்த்தனா : இந்தியன் ஸ்டைல் பாஸ்தா