அமைச்சர் காந்திராஜ் மீது இரண்டு குற்ற வழக்குகள் உள்ளதாக கூறப்படும் நிலையில் காவல் நிலையத்தில் அமர்ந்து காவலர்களை நிற்கவைத்து அதிகாரம் செலுத்துவது எத்தகைய நிர்வாக நெறிமுறை? என அதிமுக தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்தது முதல் அவ்வப்போது அமைச்சர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு அதை ரீல்ஸ் எடுத்து வெளியிடுவது பெரும சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் , கூட்டுறவுத்துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் காந்தி ராஜ் நள்ளிரவில் காவல்நிலையம் சென்று பெண் காவலர் உட்பட காவலர்களிடம் ஆய்வு என்ற பெயரில் கேள்வி எழுப்புவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
இதுகுறித்து அதிமுக எம்.பி இன்பதுரை தனது எக்ஸ் பதிவில், இந்த போலீஸ் ஆய்வு விடியோ போலியா? உண்மையா?
உள்துறை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் வசம் இருக்கும்போது, கூட்டுறவுத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் காந்திராஜ் காவல் நிலையத்திற்குள் நுழைந்து, அதுவும் நள்ளிரவில் பெண் காவலர்களை அழைத்து நாடக ஆய்வு நடத்த வேண்டிய அவசியம் என்ன?
குறிப்பாக, அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் அமைச்சர் மீது http://Cr.No.479/2024, http://Cr.No.140/2026 என இரண்டு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில்,காவல் நிலையத்தில் அமர்ந்து காவலர்களை நிற்கவைத்து அதிகாரம் செலுத்துவது எத்தகைய நிர்வாக நெறிமுறை?
ஆய்வு என்ற பெயரில் காவல் நிலையத்தில் ரீல்ஸ் எடுக்க எந்தச் சட்டம் அனுமதி அளிக்கிறது?
Prakash Singh v. Union of India (2006) 8 SCC 1 வழக்கில் உச்சநீதிமன்றம் வலியுறுத்திய காவல்துறையின் சுதந்திரமும், அரசியல் தலையீடற்ற செயல்பாடும், விஜய் அரசின் ஆட்சியில் தமிழ்நாட்டில் கேள்விக்குறியாக்கப்படுகிறதா? ” என பதிவிட்டுள்ளார்.









