‘Reels மோகம்’ புலியையே விரட்டிச் சென்றதா சிறுத்தை? – அமைச்சர் வன்னி அரசுக்கு டிடிவி தினகரன் கேள்வி

By Pandeeswari Gurusamy

|

Published on 16 Nov 2026, 11:23 AM

முதுமலை வனப்பகுதிக்குள் அமைச்சர் வன்னி அரசு புலியை விரட்டிய வீடியோ வெளியான நிலையில் சமூக நீதிப்போராளிகளையும் ரீல்ஸ் மோகம் விட்டு வைக்கவில்லை என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “முதுமலை வனப்பகுதிக்குள் புலியை விரட்டியதோடு, வனத்துறை வாகனத்தின் மீது அமர்ந்து வீடியோ எடுத்து, அதனைச் சமூக வலைத்தளங்களில் Reels-ஆகப் பதிவிட்டுள்ள சமூகநீதித் துறை அமைச்சர் திரு. வன்னியரசு அவர்களின் செயல், சமூகநீதிப் போராளிகளுக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

வனத்துறைக்கும், வனப்பகுதிகளுக்கும் நேரடித் தொடர்பில்லாத அமைச்சர் வன்னியரசு அவர்கள், வனத்துறை அதிகாரிகள் படைசூழ வனப்பகுதிக்குள் எவ்வாறு வலம் வந்தார் என்ற கேள்வி ஒருபுறம் எழுந்துள்ள நிலையில், வனவிலங்குகளை அச்சுறுத்தும் வகையிலான செயல்களில் அவர் ஈடுபடுவதற்கு வனத்துறை அதிகாரிகள் அனுமதித்தது பல்வேறு சர்ச்சைகளுக்கும் வழிவகுத்துள்ளது.

தவெக ஆட்சியில் ஆளுங்கட்சியினரின் நிர்வாகிகள் தொடங்கி, சட்டமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சர் வரை அனைவரும் Reels மோகத்தில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருக்கும் நிலையில், ஆட்சியில் பங்கெடுத்துள்ள விசிக அமைச்சரும் தனது பங்கிற்கு Reels எடுத்தே தீர வேண்டும் என்பதற்காக, வனவிலங்குகளின் இயல்பான அமைதியையும் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கும் செயல்களில் இறங்கிவிட்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது.

ADVERTISEMENT

அமைச்சராக இருந்தால் வனவிலங்குகளை விரட்டுவதற்கும், அவற்றின் இயல்பான வாழ்விடங்களுக்குள் அத்துமீறி நுழைவதற்கும் ஏதேனும் சிறப்புச் சட்ட விலக்கு இருக்கிறதா? வனவிலங்குகளைத் துன்புறுத்துவோர் மீது பாயும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், அமைச்சர் வன்னியரசு அவர்கள் மீதும் பாயுமா? என்ற அடுக்கடுக்கான கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளன.

எனவே, முதுமலை வனப்பகுதிக்குள் நுழைந்து வனவிலங்குகளை அச்சுறுத்தும் வகையில் அத்துமீறியதாக அமைச்சர் திரு. வன்னியரசு அவர்கள் மீது எழுந்துள்ள புகார் குறித்து உரிய விசாரணை நடத்தி, விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டால், அமைச்சர் உட்பட இதற்குத் துணைபோன அனைத்து வனத்துறை அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel