காலையில் கிளம்பும்போது “இன்னைக்கு என்ன போடுறது?” என்ற குழப்பம் கல்லூரி மாணவிகளுக்கு அடிக்கடி வரும். பாரம்பரிய உடையும் மேற்கத்திய உடையும் கலந்து போடும் ஃபியூஷன் ஃபேஷன் இப்போது நிறையப் பேருக்குப் பிடித்தமானது. அதிக நேரமும் செலவும் இல்லாமல், இருக்கும் உடைகளோடு சில சின்ன அணிகலன்களைச் சேர்த்தே மாடர்ன் எத்னிக் லுக் கொண்டுவந்துவிடலாம்.
1. குர்தி + ஜீன்ஸ்
வழக்கமாகப் போடும் குர்தியோடு ஜீன்ஸ் அல்லது டெனிம் ஜாக்கெட்டைச் சேர்த்துப் பாருங்கள். பாரம்பரிய உடைக்கு மாடர்ன் தோற்றம் கிடைக்கும், கல்லூரிக்குப் போக வசதியாகவும் இருக்கும். நீளமான குர்தியை ஷார்ட்ஸ் அல்லது டெனிமோடும் இணைக்கலாம்.
2. ஆக்ஸிடைஸ்டு நகைகள்
சாதாரண உடையையும் தனித்துவமாகக் காட்டுவது அணிகலன்கள்தான். ஆக்ஸிடைஸ்டு வெள்ளி ஜிமிக்கி, ஹாரம், பெரிய மோதிரங்கள் எல்லாம் ஃபியூஷன் உடைகளுக்கு நன்றாகப் பொருந்தும்.
3. மேக்கப் போட்டதே தெரியாத மேக்கப்
ஓவர் மேக்கப் தேவையில்லை. லேசான BB கிரீம், லிப் டின்ட் போதும். கண்களுக்கு மெல்லிய ஐலைனர், மஸ்காரா சேர்த்தால் இயல்பான தோற்றம் கிடைக்கும்.
4. உதடும் கூந்தலும்
நியூட் பிரவுன், பீச், பெர்ரி நிற லிப்ஸ்டிக்குகள் மாடர்ன் எத்னிக் தோற்றத்துக்கு அழகாகப் பொருந்தும். கூந்தலை இறுக்கிக் கட்டாமல், இயற்கையான அலைகளோடு திறந்துவிடுவதும் நல்ல தேர்வு.
5. பொட்டு முதல் செருப்பு வரை
- சிறிய கருப்புப் பொட்டு அல்லது உடைக்குப் பொருந்தும் நிறப் பொட்டு தோற்றத்தை முழுமையாக்கும்.
- அஜ்ரக், கலம்காரி பிரிண்ட் டாப்ஸை ஜீன்ஸோடு போடலாம்.
- கால்களுக்கு மாடர்ன் கோலாபுரி ஜுத்தி அல்லது எளிய ஃபிளாட்ஸ் தேர்ந்தெடுக்கலாம்.
- பிளைன் வெஸ்டர்ன் டாப்ஸோடு வண்ணமயமான பந்தனி துப்பட்டாவை ஸ்கார்ஃப் மாதிரி போட்டாலும் வித்தியாசமாக இருக்கும்.
இந்தச் சின்னச் சின்ன மாற்றங்களை முயற்சி செய்தால், கல்லூரி நாட்களில் தினமும் ஒரு புது ஸ்டைலில் கலக்கலாம்.









