Saidai Duraisamy son Vetri died Mk stalin Edappadi condolence

சைதை துரைசாமி மகன் வெற்றி மறைவு: ஸ்டாலின், எடப்பாடி இரங்கல்!

தமிழகம்

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இமாச்சலபிரதேசம் மாநிலத்திற்கு தனது நண்பர் கோபிநாத்துடன் சுற்றுலா சென்ற சைதை துரைசாமி மகன் வெற்றி பயணித்த கார் கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கார் ஓட்டுநர் தன்ஜின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட கோபிநாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காணாமல் போன வெற்றியின் உடலை தேடும் பணி நடைபெற்று வந்தது.

இந்த விபத்து நடந்தபோது முதல்வர் ஸ்டாலின் ஸ்பெயினில் இருந்தார். விபத்து குறித்து தெரிந்ததும், உடனடியாக தமிழக காவல்துறை அதிகாரிகளை தொடர்புகொண்ட ஸ்டாலின், மீட்பு பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார்.

இந்தநிலையில், கடந்த 8 நாட்களாக தேடப்பட்டு வந்த வெற்றியின் உடல் இன்று மீட்கப்பட்டது.

இந்தநிலையில், வெற்றியின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின்

இமாச்சல பிரதேசத்தில் நடந்த கார் விபத்தில் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி உயிரிழந்து, அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது குறித்த செய்தியைப் பார்த்து அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் அடைந்தேன்.

எந்தவொரு தந்தையும் எதிர்கொள்ளக் கூடாத, எதிர்கொள்ள இயலாத துயரம் இது.

உயிருக்கு உயிரான மகனை இழந்து தவிக்கும் சகோதரர் சைதை துரைசாமி அவர்களுக்கு இத்துயர்மிகு நேரத்தில் எனது இதயபூர்வமான ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

அன்புச் சகோதரர் சைதை துரைசாமி அவர்கள், தாலாட்டி, சீராட்டி, அழகு பார்த்து வளர்த்த தன் ஒரே மகனை இழந்தது, அவருக்கு தாங்கிக்கொள்ள முடியாத, ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும்.

மகனை இழந்து மிகுந்த சோகத்தில் வாடும் சைதை துரைசாமி துயரத்தில் நானும் பங்கேற்கிறேன்.

பெற்ற மகனை இழந்து வாடும் அன்புச் சகோதரர் சைதை துரைசாமி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், வெற்றி துரைசாமியினுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்

முன்னாள் சென்னை மேயர், மனித நேய அறக்கட்டளையின் நிறுவனர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமிக்கு சிறு வயதிலேயே இப்படியொரு துயரச் சம்பவம் நடந்திருப்பது மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், அவரது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டு, அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

எலக்‌ஷென் ஃப்ளாஷ்: வராத கூட்டணித் தலைவர்கள்.. கோபமாய் புறப்பட்ட நட்டா

ஆளுநர் உரையில் இருந்தது என்ன?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *