திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி, முதல்வர் பதவி வாய்ப்பு.. மே 5 முதல் மே 8 வரை என்னதான் நடந்தது? விவரிக்கும் திருமாவளவன்

By Mathi

|

Published on 18 May 2026, 12:46 PM

சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் திமுக (DMK) ஆதரவுடன் அதிமுக (AIADMK) ஆட்சி அமைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், தம்மை முதல்வராக்குவது (CM Post) தொடர்பாக நடந்த உரையாடல்கள் ஆகியவை குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் (Thirumavalavan) விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.

நியூஸ் 18 தமிழ்நாடு டிவி சேனலின் செய்தி ஆசிரியர் கார்த்திகை செல்வனுக்கு அளித்த நேர்காணலில் திருமாவளவன் கூறியதாவது:

ADVERTISEMENT

திருமாவளவன்: மே 5-ந் தேதி எல்லா தலைவர்களும் ஒண்ணா போய் அறிவாலயத்துல மு.க.ஸ்டாலினைப் பார்க்கிறோம், ஆமாம். அப்ப அவரு என்ன சொன்னாருன்னா, “இது வந்து மக்கள் அளித்த தீர்ப்பு, அதனால அவரு (விஜய்) ஆட்சி அமைக்கிறதை நம்ம யாரும் இடையூறா இருக்கக் கூடாது. நாமெல்லாம் ஒற்றுமையா இருந்து செயல்படுவோம்”னு ஸ்டாலின்சொல்றார். அதாவது மே 4-ந் தேதி தேர்தல் முடிவு.. மே 5-ந் தேதி இதை ஸ்டாலின் சொல்கிறார்.

கேள்வி: ஸ்டாலின் ஒரு ட்விட்டர் பதிவுலேயே சொல்லியிருந்தார், “நாங்க வந்து எதிர்க்கட்சியா செயலாற்றுவோம்”னு முதல் ரியாக்ஷனே அப்படித்தான் வருது, கன்ஸ்ட்ரக்டிவ் அப்போசிஷன்?

ADVERTISEMENT

திருமாவளவன்: ஆமா, அப்படித்தான் வருது. “ஒண்ணா இருந்து செயல்படுவோம்”கிற மாதிரிதான் அந்த கருத்து வருது.

திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி

மே 7-ந் தேதி எங்களுக்கு தனித்தனியா ஒரு அழைப்பு வருது, திடீர்னு வந்து சிஎம் (ஸ்டாலின்) பார்க்க விரும்புறார் அப்படின்னு. அப்போ நாங்க ரெண்டு மூணு பேர் போறோம், அவங்களும் வந்திருந்தாங்க. அப்ப அங்க ஒரு கருத்து வைக்கப்பட்டது. என்னன்னா, “இது மாதிரி வந்து நம்ம அணியும் அதிமுக அணியும் சேர்ந்தா நாமளே ஆட்சி அமைக்க முடியும்”கிற ஒரு ப்ரொபோசல் வந்திருக்குது. அதுல “எடப்பாடி அவர்களை வந்து முதலமைச்சரா முன்மொழியிறாங்க, இதை பத்தி உங்க கருத்து என்ன?” அப்படின்னு.

ADVERTISEMENT

முதல்ல நான் அதை சொல்றேன், “இது திமுகவுக்கே பெரிய கேள்விக்குறி ஆயிடும், உங்களுடைய எதிர்காலமே சூனியம் ஆயிடும். இது நல்ல முயற்சி இல்லை” அப்படின்னு நான் சொல்றேன். கம்யூனிஸ்டுகளும் கிட்டத்தட்ட அதே மாதிரியான ஒரு டோன்ல தான் கருத்து சொன்னாங்க. நாங்க எழுந்து வந்துட்டோம்.

அதுக்கு பிறகு எங்களுக்கு இடையில போன்ல தான் பேசுறோம், “அது சரியாக வராது” அப்படின்னு. அப்ப அதுல நாங்க யாரும் ஈல்டு ஆகல. அது அவ்வளவுதான், முடிஞ்சு போச்சு. அதுக்கு அப்புறம் அதை பத்தி எந்த டிபேட்டும் நமக்குள்ள வரல, யாரும் நம்மகிட்ட தொடர்பு கொள்ளல.

மே 8-ந் தேதி ஸ்டாலின் சொன்னது என்ன?

மே 8-ந் தேதி இரவு நான் வந்து ஸ்டாலினைப் பார்த்து சொல்லலாம்னு போனப்ப, அவர்கிட்ட நான் பேசிட்டு இருக்கும் போது, ஒரு டூ-த்ரீ மினிட்ஸ் தான் இருக்கும், அவரு வந்து, “இல்ல, நீங்க இடதுசாரிகள் எடுக்கிற முடிவின் அடிப்படையில ஒரு முடிவெடுக்கிறதா சொல்லிட்டீங்க. அதனால நீங்க வந்து விஜய்கு சப்போர்ட் பண்ணுங்க” என்றார் ஸ்டாலின்.

முதல்வர் வாய்ப்பு குறித்த உரையாடல்

அவரு போனதற்கு பிறகு, அங்க இருந்தவங்க மத்தியில ஒரு கருத்து வருது. என்னன்னா, “இல்ல, இப்ப வேற மாதிரி ஒரு லேட்டர் (Later) டெவலப்மென்ட் இருக்குது. வந்து உங்களை வந்து காமன் கேண்டிடேட்டா (Common Candidate) ப்ரொபோஸ் பண்ணி இருக்காங்க. நீங்க முதல்வர் அப்படிங்கிற மாதிரியும், எடப்பாடியோ அல்லது மற்ற ரெண்டு மூணு பேரோ வந்து துணை முதல்வர்கள் என்கிற மாதிரியும் பேசுறாங்க” என்றார்கள்.

“யாரு பேசுறாங்க?”ன்னா,

“அதிமுக சைடுல பேசிட்டு இருக்காங்க” என்றார்கள்.

இப்ப நாங்க அதுல வந்து, “அப்படி ஒரு நிலை வந்தால், நீங்க எல்லாம் அதுக்கு ஒத்துக்கிட்டா, வெளியில இருந்து தான் எங்களால சப்போர்ட் பண்ண முடியும், நாங்க அதுக்குள்ள வரமாட்டோம். இதுக்கு எப்படி உங்க கருத்து என்ன?” அப்படின்னாங்க.

தமிழ்நாட்டுல நடக்கிற கதையா?

நான் சிரிச்சுகிட்டே சொன்னேன், “இதெல்லாம் நடக்கிற கதையா? தமிழ்நாட்டுல வந்து அந்த மாதிரிலாம் நடக்குமா? அதுக்கெல்லாம் வாய்ப்பில்லை”ங்கனு சொல்லிட்டு ரொம்ப ஃபன்னியா தான் (Funny) நான் எடுத்துக்கிட்டேன்.

அவங்க வந்து, “இல்ல இல்ல, இது ஒரு உளப்படியே சீரியஸான ஒரு மூவ் நடந்துட்டு இருக்குது” அப்படின்னாங்க. அப்புறம் நாங்க “சரி” அப்படின்னு சொல்லிட்டு வந்துட்டோம்.

“நான் நாளைக்கு காலையில 11 மணி அல்லது 12 மணிக்கு நாங்க வந்து பிரஸ்ஸ மீட் பண்ணி இதுதான் அறிவிக் கப் போறோம்” அப்படின்னு சொல்லிட்டு வந்துட்டோம். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel