தற்போதைய சூழ்நிலையில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் முதல்வராக கூட வாய்ப்பு உள்ளது என விசிக எம்.எல்.ஏ. வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் நியூஸ் 18 தமிழ்நாடு டிவி சேனலுக்கு வன்னி அரசு அளித்த பேட்டி: ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பது எங்களுடைய கோட்பாடு. இதை நீண்டகாலமாக நாங்கள் சொல்லி வருகிறோம். அதனை நினைவுபடுத்தும் வகையிலும் மறுவடிவம் கொடுப்பதற்கான ஒரு வாய்ப்பாகவும் தற்போதைய சூழ்நிலையை நாங்கள் பார்க்கிறோம். இதற்கு தமிழ்நாட்டு மக்கள் தீர்ப்பு கொடுத்துள்ளதாக பார்க்கிறேன்.
விஜய்க்கு ஆதரவா? இல்லையா? என திருமாவளவன் என்ன முடிவு எடுப்பார் என்பதற்காகவே நாங்கள் காத்திருக்கிறோம். தற்போதைய சூழ்நிலையில் துணை முதல்வர் என்ன? திருமாவளவன் முதல்வராவதற்கு கூட வாய்ப்பிருக்கிறது என நான் நினைக்கிறேன். இவ்வாறு வன்னி அரசு கூறினார்.
