ஆளுநர் அர்லேகரிடம் தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரி கொடுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் கடிதம் பெரும் சர்ச்சையாகி உள்ளது.
தவெக தலைவர் விஜய் நேற்று மாலை ஆளுநர் அர்லேகரை சந்தித்தார். அப்போது தமக்கு ஆட்சி அமைக்க மெஜாரிட்டி இருக்கிறது என்பதற்கான ஆதரவு கடிதங்களையும் அர்லேகரிடம் விஜய் கொடுத்தார்.

விஜய் கொடுத்ததாக கூறப்படும் அந்த கடிதத்தில்
- தவெக-108
- காங்கிரஸ் – 5
- சிபிஐ -2
- சிபிஎம் -2
- விசிக – 2
- முஸ்லிம் லீக்- 1
- அமமுக -1
என மொத்தம் 121 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது தெரிவிக்கப்பட்டிருந்தது.
முஸ்லிம் லீக், விசிக, அமமுக
ஆனால் 2 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விஜய் ஆட்சி அமைக்க எந்த ஒரு எம்.எல்.ஏ.வும் ஆதரவு கடிதம் தரவில்லை என திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
அதேபோல விசிக தரப்பிலும் விஜய்க்கு ஆதரவு என அறிவிக்கவும் இல்லை.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் விஜய்க்கு ஆதரவு என அறிவிக்கவில்லை; அப்படியான செய்திகள் வதந்தி என மறுப்பு தெரிவித்திருந்தார்.
திருமா, காதர் மொகிதீன், டிடிவியை சந்திக்காத விஜய்
மேலும், ஆளுநர் அர்லேகரை சந்தித்துவிட்டு வெளியே வந்த விஜய், சிபிஐ மற்றும் சிபிஎம் அலுவலகங்களுக்கு மட்டும் நேரில் சென்று நன்றி தெரிவித்தார்.
ஆனால் விசிக தலைவர் திருமாவளவன், முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரை விஜய் சந்திக்காதது ஏன் என்பதும் கேள்விக்குரியதாகிவிட்டது. இதனால் ஆளுநர் அர்லேகரிடம் விஜய், கொடுத்த ஆதரவு கடிதங்கள் உண்மை இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதே நேரத்தில் தவெக தரப்பில் இந்த கடிதத்தை மறுக்கும் வகையில் இதுவரை எந்த ஒரு விளக்கமும் அதிகாரப்பூர்வமாக தரப்படவும் இல்லை.
