திருமாவின் முடிவு என்ன?

Published On:

| By Kavi

Vijay VCK

தமிழக வெற்றி கழகத்துக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக நாளை முடிவு அறிவிக்கப்படும் என்று விசிக தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றி கழகத்துக்கு விசிக ஆதரவு தெரிவித்து கடிதம் அனுப்பி இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் பாவலன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT

அதில், ‘தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பது தொடர்பாக அக்கட்சியின் சார்பில் ஆதரவு கேட்ட நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர் நிலை குழுக் கூட்டம் இன்று இணையவழியில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் தமிழகம் தழுவிய அளவில் கலந்து கொண்ட உயர்நிலை குழு கூட்டத்தின் உறுப்பினர்கள் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

ADVERTISEMENT

ஆகையால்,அக் கூட்டத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்ட கருத்துகள் அடிப்படையில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு நாளை விசிக தலைவர் திருமாவளவன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.

இதற்கிடையே ஊடகங்களில் இரு வேறு மாறுபட்ட கருத்துக்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இது தமிழக மக்களிடையே ஒரு குழப்பத்தை விளைவிக்கும்.
அத்துடன் விசிக மீதான நன்மதிப்பையும் சீர்குலைக்கும் போக்காகும்.

ADVERTISEMENT

ஆகவே நாளை காலை விசிக தலைவர் கட்சியின் நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share