Share Market : உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை!

Published On:

| By Minnambalam Login1

stock market update

வலுவான உலகளாவிய சந்தை குறியீடுகள் காரணமாக பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகளான சென்செக்ஸ் 297.86 புள்ளிகள் உயர்ந்து 80,722.54 புள்ளியிலும் மற்றும் நிஃப்டி 76.25 புள்ளிகள் உயர்ந்து 24,648.90 புள்ளியிலும் செவ்வாய்க்கிழமை காலை அமர்வில் உயர்வுடன் தொடங்கியது.

செவ்வாய்க்கிழமை காலை முதல் அமர்வில் பிபிசிஎல், டிசிஎஸ், ஹீரோ மோட்டோகார்ப், இண்டஸ்இண்ட் வங்கி மற்றும் அல்ட்ராடெக் சிமென்ட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் NSE-யில் அதிக லாபம் ஈட்டி வருகின்றன.ONGC, Bharti Airtel, Cipla, HCL Tech and ITC நிறுவன பங்குகள் சரிவை சந்தித்து வருகிறது.

மின்சார வாகனங்களின் (EV) உற்பத்தி நிறுவனமான ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி பங்கு விலை செவ்வாய்க்கிழமை இன்று தொடர்ந்து 7 வது நாளாக விலை உயர்ந்து லாபத்தை கொடுத்து வருகிறது.

செவ்வாய்க்கிழமை காலை அமர்வில் இந்நிறுவனத்தின் பங்கு இன்ட்ரா-டே வர்த்தகத்தில் BSE இல் ரூ.157.53  என்ற புதிய உச்சத்தைத் தொட்டது. ஐபிஓவில் பட்டியலிடப்பட்ட விலையை விட கடந்த ஒரு வாரத்தில் 107% லாபத்தைக் கொடுத்துள்ளது இந்த பங்கு.

DCM ஸ்ரீராம் நிறுவனத்தின் பங்கு செவ்வாய்க்கிழமை 2 சதவீதம் வரை உயர்ந்து ஒரு பங்கு ரூ.1,167.80  வரை உயர்ந்து இன்ட்ராடே அதிகபட்சத்தை எட்டியது. மஹிந்திரா அண்ட் மஹிந்திரா (எம் & எம்) லிமிடெட் பங்கு செவ்வாய்க்கிழமை 1% சரிவுடன் வர்த்தகமாகின்றன.

Block Deal வர்த்தகத்தில் ZOMATO நிறுவனத்தின் முதலீட்டு நிறுவனமான ஆன்ட்ஃபின் சிங்கப்பூர் சுமார் ரூ.4,650 கோடி மதிப்புள்ள 18.5 கோடி பங்குகளை விற்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

மாதாந்திர செயல்பாடுகள் உற்சாகமாக உள்ளதன் காரணமாக ஆல்கார்கோ லாஜிஸ்டிக்ஸ் பங்கு விலை செவ்வாய்க்கிழமை பிஎஸ்இயில் சுமார் 12 சதவிகிதம் உயர்வைக் கண்டு வருகிறது.

பல்வேறு செய்திகள் காரணமாக Tata Motors, Zomato, Bajaj Auto, HCLTech, Nucleus Software, SeQuent Scientific, Sapphire Foods, Tata Consumer Products, Hi-Tech Pipes, Poly Medicure, IndusInd Bank நிறுவன பங்குகள் இன்று செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் கவனம் செலுத்தப்படுகிறது.

மணியன் கலியமூர்த்தி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

அட்ஜஸ்ட்மென்டுக்கு ஒப்புக் கொண்ட நடிகைகளுக்கு தனி கோட் வேர்டு… போலீசுக்கு போனால் என்ன நடக்கும் தெரியுமா?

முதல்வரின் முதன்மைச் செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமனம்!

வங்கிக்கணக்குகள் முடக்கம் : தேவநாதன் கைது அப்டேட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share