ரூ.525 கோடி அளவிற்கு நிதி மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு, ஆகஸ்ட் 13 கைதான மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவர் தேவநாதன் யாதவின் பெயரில் உள்ள 5 வங்கிக்கணக்குகளையும், அவர் தலைவராக உள்ள நிதி நிறுவனத்தின் கணக்குகளையும் பொருளாதார குற்றப்பிறிவு காவல்துறை இன்று(ஆகஸ்ட் 20) முடக்கியுள்ளது.
மயிலாப்பூரில் இயங்கி வருகிற நிதி நிருவனத்தின் ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனெண்ட் ஃபண்ட் லிமிடட்’ தலைவராக உள்ளார் தேவநாதன் யாதவ். இது மட்டுமல்லாமல் ‘மக்கள் கல்வி முன்னேற்றக் கழக’ என்ற கட்சியின் தலைவராகவும் இருந்து வருகிறார். பாஜகவின் தீவிர ஆதரவாளரான இவர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை மக்களவை தொகுதியில் இருந்து போட்டியிட்டு தோற்றார்.
இவர் தலைவராக உள்ள மேற்குறிப்பிட்ட நிதி நிறுவனத்தில், அதிக வட்டி கிடைக்கும் என்பதை நம்பி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற முதியவர்கள் வைப்பு நிதி தொடங்கியுள்ளனர். ஆனால் கடந்த மக்களவை தேர்தலின் பொழுது, தங்களது பணத்தைத் திரும்பத் தர நிதி நிறுவனம் மறுப்பதாக முதலீட்டாளர்கள் குற்றம்சாட்டினர்.
இதனைத் தொடர்ந்து 140-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். அதன் விளைவாக தேவநாதன் யாதவ், அவருக்கு உடந்தையாக இருந்த குணசீலன் மற்றும் மகிமைநாதனை ஆகஸ்ட் 13-ஆம் தேதி சென்னைப் பொருளாதாரத் குற்றப்பிரிவு காவல்துறை கைது செய்தது.
இந்தக் குற்றம் சம்பந்தமாகப் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறை பல இடங்களில் சோதனை நடத்தி, 4 லட்சம் ரொக்கம், இரண்டு கார்கள், ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் பல ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் மயிலாப்பூர் நிதி நிறு நிறுவனம் மற்றும் அவருக்கு சொந்தமான ‘விண்’ தொலைக்காட்சி அலுவலகத்திற்கும் சீல் வைத்தனர்.
இந்த நிலையில் தான் தேவநாதன் யாதவ் பெயரில் உள்ள ஐந்து வங்கிக்கணக்குகளும், தி மயிலாப்பூர் இந்து பெர்மணெண்ட் ஃப்ண்டின் வங்கிக்கணக்குகளும் இன்று முடக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை அவருக்கு எதிராக 300-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் புகார் அளித்துள்ளனர்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் : நிறம் என்ன தெரியுமா?
சரிந்த தங்கம் விலை…எவ்வளவு குறைந்தது?
கட்டி பிடிக்கும் சீனில் வேண்டுமென்றே 17 டேக்… மலையாள நடிகர் மீது ஹேமா கமிஷனில் நடிகை கண்ணீர்!