அட்ஜஸ்ட்மென்டுக்கு ஒப்புக் கொண்ட நடிகைகளுக்கு தனி கோட் வேர்டு… போலீசுக்கு போனால் என்ன நடக்கும் தெரியுமா?

Published On:

| By Kumaresan M

மலையாள திரையுலகில் நடிகைகள் பல்வேறு பாலியல் தொல்லைக்குள்ளாவதாக ஹேமா கமிஷன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே, இந்த அறிக்கை அப்போதைய கேரள டி.ஜி.பி லோக்நாத் போக்ராவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், தற்போதுதான் அறிக்கையில் இடம் பெற்ற தகவல்கள் மீடியாக்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.

இதனால்,  கிரிமினல்களை பாதுகாக்கும்  வகையில் கடந்த 5 ஆண்டுகளாக கேரள அரசு ஹேமா அறிக்கையை கிடப்பில் போட்டிருந்ததாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. அதே வேளையில் அறிக்கையில் இடம் பெற்ற தகவல்கள் கடும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளன.

பாலியல் வன்கொடுமை குறித்து போலீசில் புகார் அளித்தால், உடனடியாக அந்த நடிகைக்கு வேறு விதமான தொல்லைகள் கொடுக்கப்படுவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து ஹேமா கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

”போலீசில் புகார் அளித்தால் உயிருக்கே உத்திரவாதம் இருக்காது. நடிகைகளின் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு இருக்காது .போலீசில் புகார் கொடுத்த அடுத்த நாளே சம்பந்தப்பட்ட நடிகை சோசியல் மீடியாவில் பாலியல்ரீதியாக சித்திரிக்கப்படுவார்கள். முக்கியமாக நிர்வாண படங்களை மார்பிங் செய்து உறவு கொள்வது போல சமூகவலைத்தளங்களில் பதிவேற்றுவார்கள் .

தங்களது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்கிற காரணத்தால் பல நடிகைகள் வாயை மூடிக் கொள்வார்கள். இப்படி, பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் பலரும் மலையாள திரையுலகில் சிறந்த நடிகர்களாகவும் இயக்குநர்களாகவும் தயாரிப்பாளர்களாகவும் வெற்றி கண்டவர்கள். திரையுலகில் செல்வாக்கு மிகுந்த நபர்கள் என்பதால் பாதிக்கப்பட்ட பலரும் மௌனமாகியுள்ளனர்.

சினிமாவில் நடிக்கும் போது, நடிகைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டால், அது பணியிடங்களில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர் என்றே அர்த்தம்.

ஆனாலும், போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், நடிகைகள் யாரும் புகார் அளிக்க முன்வருவதில்லை . மலையாள திரையுலகின் பவர்ஃபுல் தயாரிப்பாளர்கள் , இயக்குநர்கள், நடிகர்கள் இந்த வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர்.

அட்ஜஸ்ட்மென்டுக்கு ஒத்துக் கொண்ட நடிகைகளுக்கு தனி கோட் வேர்டு கொடுக்கப்படும். ஒப்புக் கொள்ளாத நடிகைகள் மலையாள திரையுலகை விட்டு துரத்தப்படுவார்கள் ‘ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன் 

முதல்வரின் முதன்மைச் செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமனம்!

வங்கிக்கணக்குகள் முடக்கம் : தேவநாதன் கைது அப்டேட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment