தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் பொறுப்பேற்ற நிலையில், முதல்வரின் முதன்மைச் செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் இன்று (ஆகஸ்ட் 20) நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைமை செயலாளராக பணியாற்றி வந்த சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் கடந்த 18ஆம் தேதி தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து முதல்வரின் (எஸ் 1) முதன்மைச் செயலாளராக இருந்த முருகானந்தம் புதிய தலைமைச் செயலாளராக நேற்று நியமிக்கப்பட்டார்.
இதனால் முதல்வரின் அடுத்த முதன்மைச் செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்தது.
அப்போது நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் டி. கார்த்திகேயன் ஐஏஎஸ் மீது விஜிலென்ஸ் விசாரணை இருப்பதால், முதல்வரின் தனிச்செயலாளர் உமாநாத் ஐஏஎஸ் தான் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட இருக்கிறார் என்று நமது மின்னம்பலம்.காம்-ல் தெரிவித்திருந்திருந்தோம்.
இந்த நிலையில் முதல்வரின் முதன்மை செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருடன் சண்முகம் ஐஏஎஸ் மற்றும் அனு ஜார்ஜ் ஐஏஎஸ் ஆகியோரை முதல்வரின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தனிச் செயலாளர்களாக நியமித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் இன்று அரசாணை வெளியிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
வங்கிக்கணக்குகள் முடக்கம் : தேவநாதன் கைது அப்டேட்!
ஹோட்டலில் சர்வர் வேலை பார்க்கும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனை!