2022ஆம் ஆண்டு: தமிழக அரசின் பொது விடுமுறை நாட்கள்!

public

தமிழக அரசு 2022ஆம் ஆண்டில் 23 நாட்களை அரசு பொது விடுமுறையாக அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு ஒவ்வோர் ஆண்டும் அரசு பொது விடுமுறை நாட்கள் குறித்த அட்டவணையை வெளியிடும். அதன்படி 2022ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 2022ஆம் ஆண்டு 23 நாட்களை அரசு பொது விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

1. ஆங்கிலப் புத்தாண்டு – 01.01.2022 – சனிக்கிழமை

2. பொங்கல் – 14-01-2022 – வெள்ளிக்கிழமை

3. திருவள்ளுவர் தினம் – 15-01-2022 – சனிக்கிழமை

4. உழவர் திருநாள் – 16-01-2022 – ஞாயிற்றுக்கிழமை

5. தைப்பூசம் – 18-01-2022 – செவ்வாய்க்கிழமை

6. குடியரசு தினம் – 26-01-2022 – புதன்கிழமை

7. வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக/கூட்டுறவு வங்கிகள்) – 01-04-2022 – வெள்ளிக்கிழமை

8. தெலுங்கு வருடப் பிறப்பு – 02-04-2022 – சனிக்கிழமை

9. தமிழ்ப் புத்தாண்டு / மகாவீரர் ஜெயந்தி / டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினம் – 14-04-2022 – வியாழக்கிழமை

10. புனித வெள்ளி – 15-04-2022 – வெள்ளிக்கிழமை

11. மே தினம் – 01-05-2022 – ஞாயிற்றுக்கிழமை

12. ரம்ஜான் – 03-05-2022 – செவ்வாய்க்கிழமை

13. பக்ரீத் – 10-07-2022 – ஞாயிற்றுக்கிழமை

14. மொகரம் – 09-08-2022 – செவ்வாய்க்கிழமை

15. சுதந்திர தினம் – 15-08-2022 – திங்கட்கிழமை

16. கிருஷ்ண ஜெயந்தி – 19-08-2022 – வெள்ளிக்கிழமை

17. விநாயகர் சதுர்த்தி – 31-08-2022 – புதன்கிழமை

18. காந்தி ஜெயந்தி – 02-10-2022 – ஞாயிற்றுக்கிழமை

19. ஆயுத பூஜை – 04-10-2022 – செவ்வாய்க்கிழமை

20. விஜயதசமி – 05-10-2022 – புதன்கிழமை

21. மிலாது நபி – 09-10-2022 – ஞாயிற்றுக்கிழமை

22. தீபாவளி – 24-10-2022 – திங்கட்கிழமை

23. கிறிஸ்துமஸ் – 25-12-2022 – ஞாயிற்றுக்கிழமை

பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்ட இவற்றில் வார விடுமுறை நாட்களான ஆறு ஞாயிற்றுக்கிழமைகள் பொது விடுமுறை நாட்களாக வருகின்றன.

**-ராஜ்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *