pஏழு கேமராவுடன் களமிறங்கும் ஸ்மார்ட்போன்!

public

1

மொத்தம் ஏழு கேமராக்களுடன் ஸ்மார்ட்போன் போர்க்களத்தில் இறங்கும் நோக்கியா மொபைல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நோக்கியா 9 ப்யூர்வியூ ஸ்மார்ட்போன் பற்றிய படங்களும், வீடியோக்களும் ஏற்கெனவே கசிந்துள்ளன. ஸ்மார்ட்போன் உலகின் கடும் போட்டியை, முக்கியமாக சீன நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க மேற்குலக நிறுவனங்கள் பல புதுமைகளை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க முயல்கின்றன. அந்த வகையில், நோக்கியா 9 ப்யூர்வியூ மொபைலின் சிறப்பம்சம் என்னவென்றால் இதில் ஏழு கேமராக்கள் உள்ளன. இதில், முன்புறம் இரண்டு கேமராக்கள் உள்ளன. இந்த போனின் கூடுதல் அம்சங்கள் பற்றி இணையத்தில் தகவல்கள் கசிந்துள்ளன. இந்த மொபைலின் பின்புறம் ஐந்து கேமராக்கள் இருப்பதே அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

எனினும், இந்த ஐந்து கேமராக்களின் மெகாபிக்ஸல்கள் என்னவாக இருக்கும் என்பது தெரியவில்லை. செல்ஃபி படங்களின் தரத்தை மேம்படுத்த முன்புறம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுவரை வெளியான செய்திகளின்படி இந்த மொபைலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸார் இருப்பதாக தெரிகிறது. மேலும், ஆண்டிராய்ட் ஒன் ஓ.எஸ் உடன் இம்மொபைல் வெளியாகிறது. 6 GB RAM வசதியுடன் இந்த போன் வருவதாக கூறப்படுகிறது. எனினும் 2018ஆம் ஆண்டில் 8 GB RAM டிரெண்டாக இருந்ததால் 8 GB RAM ரகமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் 128 GB, 256 GB என இரு ரகங்களில் ஸ்டோரேஜ் வசதியுடன் இம்மொபைல் வெளியாகவிருக்கிறது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *