bகாவல் துறையை விமர்சித்த இளைஞர் கைது!

public

காவல் துறையை விமர்சனம் செய்த இளைஞர் ஒருவர் பல மாதங்களுக்குப் பிறகு குவைத்திலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு, போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த சூலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி பெயர் உஷா. இவர்கள் இருவரும், கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று மாலை தஞ்சாவூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் திருச்சி நோக்கிச் சென்றனர். துவாக்குடி சுங்கச்சாவடி அருகே போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் தலைமையில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். தலைக்கவசம் அணியாமல், அந்த வழியாக வந்த ராஜாவின் வாகனத்தை ஆய்வாளர் காமராஜ் நிறுத்த முயற்சித்தார். அவரது வாகனம் நிற்காமல் சென்றதால், காமராஜ் அவரைப் பின்னால் தொடர்ந்தார். பெல் ரவுண்டானா அருகே சென்றபோது, அந்த வாகனத்தை எட்டி உதைத்தார் காமராஜ். இதனால், ராஜாவின் மோட்டார் பைக் நிலை தடுமாறி விழுந்ததில், உஷா சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து, ராஜாவின் உறவினர்கள் காவல் துறையைக் கண்டித்துச் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிவகங்கை மாவட்டம் காளையார் கோயிலை அடுத்த நெடுங்குளத்தை சேர்ந்தவர் சங்கரலிங்கம். இவர், குவைத் நாட்டில் பணியாற்றி வருகிறார். உஷா உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, காவல் துறையைக் கடுமையாக விமர்சித்துப் பேசும் வீடியோவை இணையதளமொன்றில் இவர் பதிவிட்டார். கடந்த மார்ச் 21ஆம் தேதியன்று, இது தொடர்பாக சங்கரலிங்கம் மீது திருச்சி திருவெறும்பூர் காவல்நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, சங்கரலிங்கத்தை குவைத்திலிருந்து இந்தியா அழைத்து வருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதுகுறித்து திருச்சி திருவெறும்பூர் காவல் துறை மத்திய உள் துறை அமைச்சகத்துக்குக் கோரிக்கை வைத்தது. மத்திய உள் துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் சங்கரலிங்கத்தை இந்தியாவுக்குக் கொண்டுவர இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்தது. இதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் (ஜூலை 31) இந்தியா திரும்பிய சங்கரலிங்கத்தைத் திருவனந்தபுரத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *