மக்களுக்கு அடுத்த ஷாக்.. மீண்டும் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை.. சென்னையில் ‘ரேட்’ என்ன தெரியுமா?

Published On:

| By Mathi

Petrol and Diesel Prices

நாடு முழுவதும் கடந்த 10 நாட்களில் 3-வது முறையாக இன்று மே 23-ந் தேதி பெட்ரோல், டீசல் விலை (Petrol and Diesel Prices) உயர்த்தப்பட்டுள்ளது.

மேற்கு ஆசிய நாடுகளின் போர்ச் சூழல், சர்வதேச கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் மையமான ஹோர்முஸ் ஜலசந்தியில் நீடிக்கும் பதற்றம் உள்ளிட்டவைகளால் கடந்த மே 16-ந் தேதி பெட்ரோல், டீசல் விலை (Petrol and Diesel Prices) 1 லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டது.

ADVERTISEMENT

இதனையடுத்து கடந்த மே 19-ந் தேதி பெட்ரோல், டீசல் விலை மீண்டும் 90 காசுகள் உயர்த்தப்பட்டன.

இந்நிலையில் கடந்த 10 நாட்களில் 3-வது முறையாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
  • பெட்ரோல் விலை 1 லிட்டருக்கு 87 காசுகள்
  • டீசல் விலை 1 லிட்டருக்கு 91 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன.

கடந்த 10 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை ரூ5 உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு ரஷ்யா- உக்ரைன் யுத்த காலத்தின் போதும் இதே போல தொடர்ந்து சிறிய அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன.

ADVERTISEMENT

தற்போதைய பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மிக கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, “வதந்திகளை நம்பி மக்கள் தேவையில்லாமல் அதிக அளவில் எரிபொருளை வாங்கிச் சேமிக்க வேண்டாம்; நாட்டில் தட்டுப்பாடின்றி பெட்ரோல், டீசல் கிடைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என மத்திய பெட்ரோலிய அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

முக்கிய நகரங்களில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் (Petrol and Diesel Prices)

நகரம்பெட்ரோல் விலை (லிட்டருக்கு)டீசல் விலை (லிட்டருக்கு)
சென்னை₹105.31 (+87 காசுகள்)₹96.98 (+91 காசுகள்)
மும்பை₹108.49₹95.02
கொல்கத்தா₹110.64₹97.02
டெல்லி₹99.51₹92.49
நொய்டா₹98.78₹93.12

இன்றைய புதிய விலை நிலவரம் (தமிழ்நாடு)

மாநகரம் / மாவட்டம்பெட்ரோல் விலை (ரூ./லிட்டர்)டீசல் விலை (ரூ./லிட்டர்)
சென்னை (Chennai)₹ 105.38₹ 97.04
கோயம்புத்தூர் (Coimbatore)₹ 105.85₹ 97.52
மதுரை (Madurai)₹ 106.10₹ 97.91
திருச்சி (Trichy)₹ 105.98₹ 97.70
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share