விடிந்ததும் ஷாக்! 5 நாட்களில் 2-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. இன்றைய விலை நிலவரம் என்ன?

Published On:

| By Mathi

Petrol and Diesel Price

பெட்ரோல், டீசல் (Petrol) (Diesel) விலை 5 நாட்களில் 2-வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

மேற்கு ஆசியாவில் தொடர்ந்து நீடித்து வரும் போர்ச்சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகின்றன. எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய இடமான ஹோர்முஸ் ஜலசந்தியும் போர் முனையாகி உள்ளதால் சர்வதேச சந்தையில் 1 பேரல் கச்சா எண்ணெய் விலை 111 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

இதனால் உலக நாடுகளில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து வருகிறது. இந்தியாவில் 5 நாட்களுக்கு முன்னர் 1 லிட்டர் பெட்ரோல், டீசல் விலை ரூ3 உயர்த்தப்பட்டது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்தன.

இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி உள்ளன. 1 லிட்டர் பெட்ரோல், டீசல் விலையை 90 காசுகள் உயர்த்தி உள்ளன.

ADVERTISEMENT

நாட்டின் முக்கிய நகரங்களில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம் (PetroL PRICE)

நகரம் (City)பெட்ரோல் (ரூபாய்/லிட்டர்)டீசல் (ரூபாய்/லிட்டர்)
டெல்லி (Delhi)98.6491.58
மும்பை (Mumbai)107.5994.08
கொல்கத்தா (Kolkata)109.7096.07
சென்னை (Chennai)104.4696.11
சண்டிகர் (Chandigarh)98.1086.09
ஹைதராபாத் (Hyderabad)111.8899.95
ஜெய்ப்பூர் (Jaipur)109.3294.50
பெங்களூரு (Bengaluru)107.1295.04
லக்னோ (Lucknow)98.4091.73
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share