நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்தி உள்ளன. பெட்ரோல், டீசல் விலை 1 லிட்டருக்கு ரூ 3 உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மத்திய கிழக்கில் போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில் கச்சா எண்ணெய் வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளது. இதனால் உலக நாடுகளின் எண்ணெய் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பல்வேறு நாடுகளில் பெட்ரோல் , டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளன.
இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் பயன்பாட்டை சிக்கனமாக மேற்கொள்ள பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் கடுமையாக உயர்த்தி அறிவித்துள்ளன.
நகரங்களில் பெட்ரோல் விலை (மே 15)
| நகரம் | பெட்ரோல் விலை (ரூ./லிட்டர்) | விலை மாற்றம் (ரூ.) |
| புது டெல்லி | ₹97.77 | +₹3.00 |
| கொல்கத்தா | ₹108.74 | +₹3.29 |
| மும்பை | ₹106.64 | +₹3.10 |
| சென்னை | ₹103.90 | +₹3.10 |
| பெங்களூரு | ₹106.17 | +₹3.21 |
| ஹைதராபாத் | ₹110.89 | +₹3.39 |
| திருவனந்தபுரம் | ₹110.75 | +₹3.00 |
| குர்கான் | ₹98.29 | +₹2.99 |
| நொய்டா | ₹98.04 | +₹3.30 |
| சண்டிகர் | ₹97.27 | +₹2.97 |
| ஜெய்ப்பூர் | ₹108.19 | +₹3.16 |
| லக்னோ | ₹97.58 | +₹2.85 |
| பாட்னா | ₹108.55 | +₹3.01 |
| புவனேஸ்வர் | ₹104.57 | +₹3.60 |
