விஜய் முதல்வராவதை தடுக்க நடந்த சதிகள்.. ‘அணுகுண்டு’ வீசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா- பரபர தகவல்!

Published On:

| By Mathi

Vijay CM Aadhav Arjuna Speech

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதல்வராவதை தடுக்க எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், பல்வேறு சதிகள், சூழ்ச்சிகளை செய்ததாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா குற்றம் சாட்டி உள்ளார்.

வில்லிவாக்கத்தில் நேற்று மே 14-ந் தேதி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது:

நம்ம தலைவர் முதலமைச்சர் ஆகக்கூடாதுன்னு திமுக தலைவர்களும், அதுல குறிப்பா நம்ம ‘இளவரசர்’ உதயநிதி அவர்களும் ஒரு பெரிய அரசியல் பண்றாங்களாம். என்ன அரசியல்னா, ஃபர்ஸ்ட் மு.க.ஸ்டாலின் இதுக்குள்ள வரல, உண்மையைச் சொல்லிடுறேன் நான். அவரு தோல்வியுற்று அமைதியாதான் இருந்தாரு. ஆனால் திரு. இளவரசர் உதயநிதி அவர்கள் இருக்காரே, என்ன ஆனாலும் விஜய் அவர்கள் முதலமைச்சராக வரக்கூடாது. என்ன ஆனாலும் பரவாயில்லை, என்ன வேணா பண்ணிக்கோங்க… அவ்வளவு வெறி.

ADVERTISEMENT

அவரு கடைசி வாரிசா முடிச்சுட்டாருல்ல, எதாச்சும் பண்ணலாம். யார்கிட்ட தெரியுமா பேச்சுவார்த்தை பண்ணது? திரு. இபிஎஸ் அவர்களோட, பழனிசாமி அவர்களோட திரு. உதயநிதி அவர்கள் பேச்சுவார்த்தை பண்றாரு. திரு. உதயநிதி அவர்களும் திரு. சபரீஷ் அவர்களும் சேர்ந்து ஆட்சியை முடிச்சுட்டாங்க. அடுத்து திமுக கட்சிய முடிக்குறதுக்கு வேலை பண்ணிட்டு இருக்காங்க. இப்படித்தான் தலைவர் விஜய்ய எதிர்த்து நின்னு ஆட்சி போச்சு. இப்ப திருப்பியும் இவர முதலமைச்சரா உட்கார வைக்கக்கூடாதுன்னு இபிஎஸ் ஐயா கிட்ட பேசுனா என்ன ஆகும்?

எங்கயாச்சும் அண்ணா உருவாக்கிய கட்சி, சமூக நீதி பேசிய கட்சி, மதச்சார்பின்மைனு சொல்லக்கூடிய கட்சி… தேர்தலுக்கு முன்பு திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், ஏன் திரு. உதயநிதி அவர்கள், திரு. எடப்பாடி பழனிசாமிய பார்த்து என்னெல்லாம் கேள்வி கேட்டாங்க? ‘பிஜேபியை தமிழகத்தில் ஆட்சிக்கட்டிலில் ஏத்த துடிக்க வைக்குது திரு. இபிஎஸ், அதிமுக தான். இவங்களுக்கு ஓட்டு போட்டா பிஜேபி ஆட்சிக்கு வந்துரும். இது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கிடையாது, இது அமித்ஷா முன்னேற்றக் கழகம்’ – இப்படி பிரச்சாரம் செஞ்சது யாரு? திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள். இன்னொருத்தர் யாரு? இளவரசர் உதய்.

ADVERTISEMENT

அந்த இளவரசர் உதய அவர்களுக்கு பட்டாபிஷேகம் பண்ணிதான உட்கார வச்சிருக்காங்க? மன்னராட்சி. இன்னும் ஒழியல, கொஞ்சம் பிசுறு இருக்கு பாத்துக்கலாம். அப்ப பட்டாபிஷேகத்தோட உட்கார்ந்துட்டு இருக்க இளவரசர் ஒரு அரசியல் ஞானி மாதிரி, கலைஞர் கடினப்பட்டு உருவாக்கிய அந்த கட்சிய அதிமுகவோட சேர்ந்து வெளியிலேர்ந்து ஆதரவு கொடுப்பாங்களாம், திரு. இபிஎஸ் பழனிசாமி அவர்கள் முதல்வராயிடுவாராம்.

என்ன சூழ்ச்சி பாத்தீங்களா? இந்த சூழ்ச்சி நமக்கு தெரிஞ்சிருச்சு, வந்துருச்சு. ஒரு நேரத்துல 8-ஆம் தேதி மத்தியானம் தகவல் வருது, 7-ஆம் தேதி நைட்டு தகவல் வருது… ‘இபிஎஸ் அவர்கள் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கப் போறாரு, எல்லாம் முடிஞ்சிருச்சு’ அப்படின்னு.

ADVERTISEMENT

யாரு குதிரை பேரம் நடத்துனது? அந்த குதிரை பேரத்தை நடத்துனது யாரு சொல்லவா? லிஸ்ட் நான் சொல்றேன். ‘பாஷ்யம்’ கம்பெனியோட ஓனர், புரோக்கர் வேலையை பாத்தாப்ல. அடுத்தது ஓப்பனா சொல்லிடணும்ல யாரு யாரெல்லாம் தலைவருக்கு எதிரா சூழ்ச்சி செஞ்சாங்கன்னு.

ரியல் எஸ்டேட் வேலைய பார்க்காம ஆட்சி மாற்றத்துக்கு இங்க உட்கார்ந்துகிட்டு கவர்னரோட சேர்ந்து உட்கார்ந்துட்டு இருந்தது ஒரு கம்பெனியோட நிறுவனர். அதோட சேர்ந்து திரு. உதயநிதி அவர்கள், அதோட சேர்ந்து திரு. இபிஎஸ் பழனிசாமி… முன்னாள் முதலமைச்சர் பழனிசாமியோட மகன் திரு. மிதுன் அவர்கள்.

அதனாலதான் இந்த ஃபேக்ஷன் உடைஞ்சுச்சு, அதிமுக-ல இருந்து வெளிய வந்தாங்களே திரு. சி.வி. சண்முகம் அண்ணன். புரட்சித் தலைவர் அவர்கள் எதற்காக கட்சிய உருவாக்கினார்? இந்த திமுக தீய சக்தியை ஒழிக்க. ஆனா அப்படி உருவாக்குன கட்சிய திரு. இபிஎஸ் ஐயா அவர்கள் திரு. மு.க.ஸ்டாலினோட சேர்ந்துட்டு ஒரே ஒரு காரணம்… தலைவர் விஜய் அவர்கள் முதலமைச்சரா வரக்கூடாது!

எந்த கொள்கையும் கிடையாது, குறிக்கோளும் கிடையாது, இதை கேட்டா.. மதச்சார்பற்ற கொள்கையாம். இதச் சொன்னது திரு. பேபி அவர்கள்… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோட தலைவர். ‘நாங்கள் ஆதரவு கொடுக்கவில்லை என்றால் திமுக-வும் அதிமுக-வும் பிஜேபி-யும் சேர்ந்து இங்கு ஒரு ஆட்சியை உருவாக்கும், அதற்கு நாங்கள் கடுமையாக எதிர்த்து நிற்போம்’னு சொன்னது திரு. பேபி அவர்கள், சொன்னது காங்கிரஸ், சொன்னது விசிக, சொன்னது ஐயுஎம்எல். இவ்வாறு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share