தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு சனாதன தர்மம் பற்றி எதுவும் தெரியாது என தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார்.
சனாதன தர்மம் ஒழிய வேண்டும் என சட்டசபையில் முழக்கமிட்டார் உதயநிதி ஸ்டாலின். இது தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறியதாவது: உதயநிதி ஸ்டாலினுக்கு சனாதன தர்மம் என்றால் என்னவென்று தெரியாது… இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் என அனைவரையும் நாங்கள் எப்போதும் சமமாகவே நடத்துகிறோம்
தனிப்பட்ட முறையில் எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை, ஆனால் ஒரு அமைச்சராக நான் மதிக்க வேண்டும்
நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல; நாங்கள் இந்துத்துவாவிற்கு எதிரானவர்கள். இந்துத்துவா என்பது ஒரு மதத்தை திணிப்பதாகும்.
நாம் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும். தமிழ்நாடு எப்போதும் சமத்துவத்தின் அடிப்படையிலானது… வட இந்தியாவில், சனாதன தர்மம் என்றால் அது இந்து மதம். தமிழ்நாட்டில், சனாதன தர்மம் என்பது சமத்துவமின்மை… நிச்சயமாக, அவர் அதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும். நாங்கள் எப்போதும் சமத்துவமின்மைக்கு எதிரானவர்கள். நாங்கள் எந்த மதத்திற்கும் எதிரானவர்கள் அல்ல. இவ்வாறு ஆதவ் அர்ஜூனா கூறினார்.
