சட்டசபையில் ‘சனாதன’ஒழிப்பு முழக்கம் ஏன்? உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

Published On:

| By Mathi

தமிழ்நாடு சட்டசபையில் தாம் சனாதனத்தை ஒழிப்போம் என பேசியது சர்ச்சையாகிய நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று மே 14-ந் தேதி இரவு உதயநிதி ஸ்டாலின் தமது சமூக வலைதளப் பக்கங்களில் அளித்துள்ள விளக்கம்: தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ”மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்”-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க.

ADVERTISEMENT

இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன்.

சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல.

ADVERTISEMENT

கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம்.

மேல் சாதி – கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன்.

ADVERTISEMENT

பெரியார் – அம்பேத்கர் – அண்ணா – கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன்.

நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் .

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி! இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share