இதெல்லாம் இப்பதான் தெரியுமா? 6 சிலிண்டர் எப்படி கொடுப்பீங்க? ஈரானை கைப்பற்றுவீங்களா? விஜய்க்கு சீமான் சரமாரி கேள்வி

Published On:

| By Mathi

seeman fires back at vijay

தமிழக அரசுக்கு ரூ.10 லட்சம் கோடி கடன் இருப்பதே தெரியாமல்தான் முதலமைச்சர் விஜய் (Vijay) தேர்தலில் போட்டியிட்டாரா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் (Seeman) கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னையை அடுத்த மறைமலை நகரில் இன்று மே 18-ந் தேதி நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியில் சீமான் பேசியதாவது:

ADVERTISEMENT

தேர்தல் வெற்றியும் தோல்வியும் கண்டு துவண்டு போகிற கட்சித் தொண்டர்கள் அல்ல நாங்கள்! கட்சித் தொண்டர்கள் அல்ல… நன்கு கட்டமைக்கப்பட்ட தமிழ்த்தேசிய ராணுவத்தின் வீரர்கள்!

ஆள் மாற்றம், ஆட்சி மாற்றத்திற்கு வந்த அரசியல்வாதிகள் அல்ல… அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றத்திற்கு வந்த புரட்சியவாதிகள்!

ADVERTISEMENT

ஆட்சிக்கு வந்துவிட்டு ரூ.10 லட்சம் கோடி கடன் இருக்குது என்கிறார்.. அது தெரியாமத்தான் முதலமைச்சர் வேட்பாளரா போட்டியிட்டீங்களா?

என்னைய தோற்கடிச்சு சட்டசபைக்குள் அனுப்பாமல் விட்டுவிட்டார்கள். நான் சட்டசபைக்குள் போயிருந்தால்.. நல்வாய்ப்பா தப்பிச்சு போயிட்டீங்க நாங்க 5 அல்லது 6 பேர் வெற்றி பெற்று சட்டசபைக்குள் வந்திருந்தால் நீங்கள் மொத்த பேரும் வெளியில தான் நிற்பீர்கள்.

ADVERTISEMENT

ரூ.10 லட்சம் கோடி கடன் பற்றி தேர்தல் பிரசாரத்தில் நான்தான் பாட்டா பாடுனேனே! 10 லட்சம் கோடி கடனில் நாடு, இதில் இலவசம் வேற பெருவக்க கேடு. தெருத்தெருவா ஊர் ஊரா பேசுனேனே.

விஜய்க்கு (Vijay) இப்பதான் தெரியுது

முதலமைச்சர் ஆன பிறகு தான் அவருக்கு தெரியுது, ரூ.10 லட்சம் கோடி கடன் இருக்குன்னு. அய்யய்யே! அப்படியா? 10 லட்சம் கடனா? என இப்பதான் அவருக்கு (முதல்வர் விஜய்)-க்கு தெரியுது.

கடன் 10 லட்சம் கோடி இருக்குது, இந்த இலவசங்களை கொடுக்க முடியாது, ஒரு லட்சம் கோடி ஏற்கனவே வட்டி, பட்ஜெட்டே 3 லட்சம் கோடி தான், வட்டியே ஒரு லட்சம் கோடி போகுது, நீங்க சொல்ற அறிவிப்பு இதெல்லாம் செயல்படுத்த இன்னும் 10 லட்சம் கோடி கடன் வாங்க வேண்டும், அப்ப மொத்த பட்ஜெட்டையும் வட்டியை கட்டிட்டு ரொட்டியை தின்னுட்டு திரிய வேண்டியதுதான்னு நான் சொன்னேன். நீங்க (முதல்வர் விஜய்) கேட்காமல் போய்விட்டீர்கள்.

வெற்று வாக்குறுதி

கொடுக்க முடியாது என்று தெரிந்து, வெற்று வாக்குறுதிகளை கொடுப்பது தான் மக்களுக்கு செய்கிற துரோகம், மக்கள் விரோதம், ஏமாற்றம்! நாங்கள் உண்மையை சொன்னோம், தோற்றுப்போனோம், மேன்மையாக கருதுகிறோம். நான் தரமாட்டேன், கொடுக்க முடியாதுன்னு சொன்னேன்.

ஆனா நீங்க? ரூ2,500 தருவதாக சோன்னீர்கள்.. இப்ப தான் நிதி நிலவரம் தெரியுது உங்களுக்கு. அதுகூட தெரியாம எதுக்கு வந்தீங்க? எதுக்கு வந்தீங்க?

ஈரானை கைப்பற்றினால்தான்..

6 சிலிண்டர், எப்படி கொடுக்கிறீங்கன்னு நானும் பார்க்கத்தான் போறேன். ஒருவேளை நீங்க போரிட்டு ஈரானையே கைப்பற்றினாதான் கொடுக்கவே முடியும். இவ்வாறு சீமான் பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share