தமிழகத்தில் 17 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்றது முதல் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று 17 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சாய் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை செயலாளராக இருந்த ககன் தீப் சிங் பேடி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளராகவும்,
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளராக இருந்த அமுதா கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளராகவும்,
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளர் சத்ய பிரதா சாகு, நீர்வளத் துறை செயலாளராகவும்,
போக்குவரத்து துறை செயலாளராக இருந்த சுன்சோங்கம் ஜடக் சிரு, பொதுப்பணித்துறை செயலாளராகவும்,

தமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட் முதன்மைச் செயலாளர்/ மேலாண்மை இயக்குனராக இருந்த அனில் மேஸ்ராம் எரிசக்தி துறை செயலாளராகவும்,
வெளிநாடு வாழ் தமிழர்கள் மறுவாழ்வு மற்றும் நலத்துறை ஆணையராக இருந்த வள்ளலார் போக்குவரத்து துறை செயலாளராகவும்,
கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளராக இருந்த கேஎஸ் பழனிசாமி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளராகவும்
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை செயலாளராக இருந்த தக்ஷிணாமூர்த்தி, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளராகவும்,
திட்டமிடல் மற்றும் வளர்ச்சித் துறை செயலாளர் சஜ்ஜன் சிங் சவான் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளர் ஆகவும்,
நிதித்துறை செயலாளராக இருந்த பிரசாந்த் வடநரே ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை செயலாளர் ஆகவும்
அரசின் நிதித்துறை சிறப்பு செயலாளராக இருந்த அருண் சுந்தர் தயாளன் பதிவுத்துறை ஐஜி ஆகவும்,
முன்னாள் முதல்வரின் இணைச் செயலாளராக இருந்த லட்சுமிபதி நிதித்துறை இணைச் செயலாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆதிதிராவிட நலத்துறை ஆணையராக இருந்த ஆனந்த், சென்னை மெட்ரோ குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை இயக்குனர் ராகுல் நாத், சிஎம்டிஏ உறுப்பினர் செயலாளராகவும்,
தமிழ்நாடு குடிநீர் வளங்கள் மற்றும் கழிவு நீரகற்றுத் தறை மேலாண் இயக்குனர் சமீரன், சென்னை மாநகராட்சி ஆணையராகவும்
முன்னாள் துணை முதல்வரின் கூடுதல் செயலாளராக இருந்த ஆர்த்தி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குனராகவும்,
பதிவுத்துறை தலைவராக இருந்த தினேஷ் பொன்ராஜ் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
