அதிமுகவின் (AIADMK) அதிருப்தி எம்.எல்.ஏக்கள் முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சர்களாவதற்கு (Ministers) அதிமுகவின் வழக்கறிஞர் அணி செயலாளர் இன்பதுரை எம்.பி. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்பதுரை தமது எக்ஸ் பக்கத்தில், “கட்சித் தாவல் தடைச் சட்ட புகாருக்கு ஆளாகிய ஒருவரை தகுதி நீக்கம் செய்ய அரசியலமைப்பு சட்டத்தின் 10 வது அட்டவணை சபாநாயகருக்கு அதிகாரம் தருகிறது
அதிருப்தி அதிமுகவுக்கு எச்சரிக்கை (AIADMK)
.அவ்வாறு புகாருக்கு உள்ளானவரை அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்கும் முன் Article 163 – ன் படி முதல்வரிடம் விளக்கம் கேட்டு ஆளுநர் திருப்தி அடைவது அவசியம்.
விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் அதை எதிர் கொள்ளும் நபர் அமைச்சராக இருந்தால் Article 142 வழங்கும் சிறப்பு அதிகாரம் மூலம் உச்ச நீதிமன்றம் அவரை பதவி நீக்கம் செய்யலாம்.
மணிப்பூர் வழக்கு
மணிப்பூர் மாநில அமைச்சர் Thounaojam Shyamkumar Singh வழக்கில் 2020 ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இதற்கு நல்ல உதாரணம். ஆக எல்லா நிலைகளிலும் அரசியலமைப்பு சட்டமே மேலோங்கி நிற்கும். இதுதான் நமது அரசியலமைப்பு சட்டத்தின் சிறப்பாகும் என கூறியுள்ளார்.









