நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (ஏப்ரல் 21) தான் போட்டியிடும் காரைக்குடி தொகுதியில் கடைசி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
தமிழக அரசியல் களம் பரபரத்துக்கொண்டிருக்கிறது. அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் தான் போட்டியிடும் காரைக்குடி தொகுதியில் சாட்டை துரைமுருகனுடன் இணைந்து பிரச்சாரம் மேற்கொண்டார் சீமான்.
அப்போது பேசிய அவர், “என் சொந்தங்களுக்குத் தெரியும், வாக்குக்குக் காசு கொடுப்பது… அந்த இடத்தில்தான் ஊழல், லஞ்சத்திற்கான விதை ஊன்றப்படுகிறது என்று. ஒரு ஓட்டுக்கு 3,000 கொடுக்கிறவன் வென்று வந்தால், 3,000 கோடி ஈட்டிக்கொள்ளலாம் என்கிற நம்பிக்கையில் முதலீடு செய்கிறான். அந்த இடத்தில், என் அருமைப் பெற்றோர்களே, உயிரினங்களே, என் உடன்பிறந்தார்களே… அங்குதான் மக்களுக்குச் சேவை செத்துப்போய், அந்த முதலீட்டுக்கான, அந்த வேட்பாளருக்கான லாபத் தேவை பிறந்துவிடுகிறது. நாம் கட்டமைத்திருக்கிற மாண்புமிக்க ஜனநாயகம் செத்துப்போய், கேடுகெட்ட பணநாயகம் பிறந்துவிடுகிறது. ஒரு முதலீட்டாளன் தன்னுடைய லாபத்தைத்தான் சிந்திப்பானே ஒழிய, மக்கள் தேவையைப் பற்றி, மக்கள் சேவையைப் பற்றிச் சிந்திக்க மாட்டான்” என்று கூறினார்.
தொடர்ந்து திமுக, தவெக, அதிமுக என அனைத்துக் கட்சிகளையும் கடுமையாக விமர்சித்தார்.
