தமிழக தேர்தல் களத்தில் அரசியல் தலைவர்களின் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரம் மட்டுமே உள்ளது.
இதற்கிடையே தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று சைதாப்பேட்டை, நந்தனம் உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் செய்தார்.
இதில் நந்தனம் பகுதியில் உரையாற்றிய விஜய்,
“மிக மிக முக்கியமான ஒரு நேரத்துல நாம இருக்கிறோம். திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பப் போற அந்தத் தேர்தலோட கடைசி பிரச்சாரம். ஸ்டாலின் சாரை வீட்டுக்கு அனுப்பப் போற அந்தத் தேர்தலோட கடைசி பிரச்சாரம். இப்படிப்பட்ட ஒரு ஆட்சியை, அதாவது மக்களைச் சுத்தமா கண்டுக்கவே கண்டுக்காத ஒரு ஆட்சியை, ஒரு தலைவரை வீட்டுக்கு அனுப்பப் போற கடைசி பிரச்சாரம்.
ஆமா, பின்ன இப்படிப்பட்டவங்களை வீட்டுக்கு அனுப்பாம பின்ன கோட்டைக்கா அனுப்புவாங்க? எத்தனை எத்தனை பொய்யான வாக்குறுதிகள். பொய் பொய்யாச் சொல்லி மக்களை ஏமாத்திக்கிட்டு அவரோட லைஃபை மட்டும் நல்லா உயர்த்திக்கிட்டாரு.
அன்று முதல் இன்று வரை ஒரே ஸ்டாண்டுதான்
மக்களோட லைஃபை அவர் எப்படி உயர்த்தினார் தெரியுமா? வீட்டு வரியை உயர்த்திட்டாரு, தண்ணி வரியை உயர்த்திட்டாரு, தொழில் வரியை உயர்த்திட்டாரு, விலைவாசியை உயர்த்திட்டாரு, குப்பைக்குக் கூட வரி போட்டாரு. இப்படி மக்களோட கஷ்டங்களை மட்டுமே அவர் உயர்த்தி வச்சிருக்கிறார். இன்னும் ஒரு படி மேல போய், இன்னும் பலபடி மேல போய் தமிழ்நாட்டில இதுவரைக்கும் எந்த கவர்மெண்ட்டுமே வாங்காத அளவுக்குக் கடன்… அவ்வளவு கடனை வாங்கி வச்சுக்கிட்டு அந்த கடன் சுமையையும் உயர்த்தி வச்சிருக்கிறார். எவ்வளவு? 5,6 லட்சம் கோடி. இத்தனை லட்சம் கோடியை வாங்கிக்கிட்டு எத்தனை பிரச்சனைகளை சால்வ் பண்ணி இருக்கலாம்? அட்லீஸ்ட் நம்ம இளைஞர்களோட கல்வி கடனையாவது ரத்து செஞ்சிருக்கலாம்.

சரி, இப்போது விக்ரவாண்டி மாநாட்டுக்கு போவோம். அந்த மாநாட்டில நான் என்ன சொன்னேன்? நம்மளுடைய அரசியல் எதிரி யாரு? திமுக. நம்மளுடைய கொள்கை எதிரி யாரு? பாஜக. அன்னையிலிருந்து இன்று வரைக்கும் அந்த ஸ்டாண்ட்ல ஏதாவது மாறணுமா? இல்லையே.
இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் எல்லாம் அவங்க அவங்க வழிபாட்டு முறையிலயும் வாழ்க்கை முறையில மட்டும்தான். ஆனா தமிழ்நாடுன்னு வந்துட்டா, ஒற்றுமையைக் காட்டணும்னு வந்துட்டா நம்மகிட்ட யாரும் வாலாட்டவே முடியாது. நம்மளுடைய நல்லிணக்கத்தை யாரும் நாசம் பண்ணவே முடியாது. சொன்னோமா இல்லையா? அன்னிலிருந்து இன்னிக்கு வரைக்கும் அந்த ஸ்டாண்ட்ல ஏதாவது மாறுனோமா? ஒரு இன்ச் கூட மாறலையே…
மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கைதானே நம்மளுடைய கொள்கை. அதிலிருந்து மாறவே மாறப்போறதில்ல. 100 சதவீதம் நீங்க உங்க விஜயை இந்த விஷயத்தில நம்பலாம். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கான ஆளாதான் இந்த விஜய் எப்பவுமே இருப்பான். எம் மதமும் நம் மதம்… அந்த ஒரிஜினல் முகம் தான் இந்த விஜயனுடைய முகம்.
இன்னொன்னு என்ன சொன்னோம்? ‘லயன் இஸ் ஆல்வேஸ் ஏ லயன்’. சிங்கம் தனியா வந்தாலும் தண்ணி காட்டிடும். இது வந்து சும்மா முரட்டு கான்ஃபிடன்ஸ்ல எல்லாம் சொல்லல. உலகம் பூரா கடவுள் நமக்கு கொடுத்திருக்கிற கோடிக்கணக்கான நம்மளுடைய வகையராக்கள் நம்மளோடு இருக்கிற கான்ஃபிடன்ஸ்ல சொன்னேன்.
ஒரு பக்கம் கதர், இன்னொரு பக்கம் காவி

இந்த விஜய் ஒன்னு சொன்னானா அதுல இருந்து மாறவே மாட்டான். சும்மா இந்த ஸ்டாலின் சார் மாதிரி எல்லாம் கிடையாது. இந்த சிறுபான்மை சகோதரர்களுடைய ஓட்டு வாங்குவதுக்காக ஒரு பக்கம் கோடி கோடியா செலவு பண்ணி தமிழ்நாட்டு காங்கிரஸைத் தூக்கி பைக்குள்ள போட்டுக்க வேண்டியது, இன்னொரு பக்கம் கட்சியை காப்பாத்திக்கணும்ங்கறதுக்காக பாஜகவோட மறைமுகக் கூட்டணியில் இருக்க வேண்டியது.
ஒரு பக்கம் கதர் வேஷம் போட வேண்டியது. இன்னொரு பக்கம் காவி வேஷம் போட வேண்டியது. நான் முன்னாடியே சொன்ன மாதிரி திமுகவுக்கும் பாஜகவுக்கும் ஒரு அண்டர் கிரவுண்ட் டீலிங் இருக்குது. எப்போ சொன்னேன்? கிட்டத்தட்ட ஒரு ஒன்றரை ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி சொன்னேன். அன்னைக்கு சொன்னது இன்னைக்கு இந்தியா முழுக்க எதிரொலிக்குதா?
வெஸ்ட் பெங்கால் சிஎம் மம்தா பானர்ஜி இதைதானே சொன்னாங்க? ஸ்டாலின் சார் பேரை மென்ஷன் பண்ணி அந்த குற்றச்சாட்ட சொன்னாங்க. இதுக்கு என்ன சார் பதில் சொல்ல போறீங்க?. மக்கள் கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறாரு.
இந்தத் தேர்தல்ல திமுக தோக்கப் போறது உறுதி. தோத்துட்டு தேர்தலுக்கு பின்னர் அந்த எபெக்ட் என்னவா இருக்கும்னு இப்பவே சொல்றேன். கட்சியை காப்பாத்திக்கணும்ல? ஏகப்பட்ட கேஸ் எல்லாம் இருக்குதுல்ல? லஞ்ச கேஸ், ஊழல் கேஸ், திருட்டு கேஸ்… அவங்க குடும்பத்து மேல, மினிஸ்டர்ஸ் மேல… எல்லாத்தையும் காப்பாத்திக்கணும்ல்ல? போய் மோடி காலையும் அமித் ஷா காலையும் திமுக விழுதா இல்லையான்னு பாருங்க.
அதுமட்டுமா? பாஜகாவோட முதல் அடிமை யாருன்னு போட்டி வேற. நீயா நானா? நானா நீயா? யாருக்கும் யாருக்கும்? இந்த திமுகவுக்கும் மற்றும் பலருக்கும். அதனால சிறுபான்மை சகோதரர்களோட இந்த விஜய் கூடவே நிப்பான், நிப்பான், நிப்பான்! அதுல எந்த மாற்று கருத்துமே கிடையாது.
கருத்து கணிப்பு அல்ல கடுப்பு கணிப்பு
இப்ப ரீசன்ட்டா நிறைய காமெடி எல்லாம் நடக்குதுல்ல? ஸ்டாலின் சாரும் மற்றும் பலரும் ஒண்ணா சேர்ந்துகிட்டு இந்த கருத்து கணிப்பு, கருத்து கணிப்பு என்ற பேர்ல நிறைய அந்த கடுப்புல விட்ட கணிப்பு எல்லாம் விட்டுட்டு இருக்காங்க.
அதுல திமுக 300 சீட்டு ஜெயிக்குமாம், மற்றும் பலர் 700 சீட்டு ஜெயிக்குமாம். யோ… எங்கய்யா இருக்கு இத்தனை சீட்டு? ஒரு தில்லு முல்லுக்கு ஒரு அளவே இல்லை. 40 வயசுக்குள்ள இருக்கிறவங்க மட்டும்தான் விஜய்க்கு ஓட்டு போடுவாங்களாம். 50 வயசுக்குள்ள இருக்கிறவங்க மட்டும்தான் விஜய்க்கு போனா போதுன்னு ஓட்டு போடுவாங்களாம். இந்த 40 வயசுக்குள்ள இருக்கிறாங்கள அந்த ஓட்டர்ஸ் அவங்க எல்லாம் ரொம்ப கம்மியாம். ஆனால் இந்த 50-லிருந்து 80 வயசு வரைக்கும் இருக்கிறாங்கள அந்த ஓட்டர்ஸ் ரொம்ப ஜாஸ்தியாம். ஆனா அவங்க யாரும் விஜய்க்கு ஓட்டு போட மாட்டாங்களாம். இப்படி பில்டப் மேல பில்டப்.
ஓங்கி மண்டையில நறுக்குன்னு குத்துற மாதிரி தேர்தல் கமிஷன் ஒரு டீடைல்டு ரிப்போர்ட் வெளியிட்டுருக்காங்க. அதுல 40 வயசுக்குள்ள இருக்கிற அந்த ஓட்டர்கள் 2 கோடி 37 லட்சம் சொச்சம். அதுல 50 வயசுக்குள்ள இருக்கிறவங்களை உள்ள சேர்த்துக்கிட்டீங்கன்னா 3 கோடி 65 லட்சம் சொச்சம். அந்த 3 கோடி 65 லட்சம் சொச்சத்துல 50 வயசுக்குள்ள இருக்கிற நம்மளுடைய அக்கா தங்கச்சிங்க மட்டும் எவ்வளவு தெரியுமா? ஒரு கோடியே 77 லட்சம் சொச்சம்! எங்கடா போனீங்க கடுப்புல விட்ட கணிப்பாளர்களே? எங்க போனீங்க?
இந்தக் கடுப்புல விட்ட கணிப்பாளர்களுக்கு ஒரே ஒரு கேள்வி. இந்த 60 வயசு மேல இருக்கிறவங்க, இந்த 70, 80 வயசுல இருக்கிற என்னுடைய அம்மா, பாட்டி, அப்பா, தாத்தா… இவங்க எல்லாரும் ‘நம்ம வீட்டுப் புள்ள விஜய்… நம்ம வீட்டுப் புள்ள விஜி’ அப்படின்னு சொல்றதெல்லாம் உங்க காதுல விழலையோ?
இந்த உண்மை எல்லாம் வெளியில சொல்லிராதீங்கன்னு ரெண்டு பேரும் நல்லா கவனிச்சு அனுப்பிச்சாங்களோ? அதனால இந்தக் கருத்து கணிப்பு, கடுப்புல விட்ட கணிப்பு… என்ன கணிப்பு என்ன விட்டாலும் திமுகவும் இந்த மற்றும் பலரும் மண்ணக் கவ்வப் போறது உறுதி. அவங்களோட இந்த ஆட்சி கனவு, லஞ்ச கனவு, ஊழல் கனவு, கொள்ளை அடிக்கிற கனவு எல்லாம் கதம் கதம் தான்!
தமிழகத்திலும் அதிக போலிங்
இப்ப ரீசன்ட்டா பாண்டிச்சேரி தேர்தல்ல கிட்டத்தட்ட 90%-க்கு மேல போலிங் ஆயிருக்குது. விட்டா 100% ஆயிருக்கும் போல இருக்கு. அதே மாதிரி போலிங் நம்ம தமிழ்நாட்டில நடக்குதா இல்லையான்னு பாருங்க.
அதனால மக்களே உங்க எல்லாரையும் கையெடுத்து கும்பிட்டுக் கேட்கிறேன். பூத்துக்குப் போய் ஸ்டாலின் சார் கிட்ட இருந்து நம்ம தமிழ்நாட்டைக் காப்பாத்தி ஆகணும். நம்ம ஜனநாயகத்தைக் காப்பாத்தி ஆகணும். என்ன பிஸியா இருந்தாலும், என்ன வேலையா இருந்தாலும், வெளியூர்ல இருந்தாலும் எந்த பூத்துல உங்களுடைய ஓட்டு இருக்குதோ அங்க வந்து தயவு செஞ்சு நம்முடைய விசில் சின்னத்துக்கு உங்க ஓட்டைப் போடுங்க.
தயவு செஞ்சு உங்க விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுங்க. இந்த நேரத்துல வெளிநாட்டில இருந்து பணம் செலவு பண்ணி பிளைட் டிக்கெட் புக் பண்ணி இங்க ஓட்டு போட வந்த நம்மளுடைய நண்பா நண்பிகள் உங்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில என்னுடைய நன்றியை தெரிவிச்சுக்கிறேன்.
அடுத்து… ஏதாவது ஒரு பிரச்சனைன்னா விஜய் வெளியவே வரமாட்டாராம். இது யார் சொல்றா? இந்த மற்றும் பலர் கட்சியில ஒருத்தர் இருக்கிறார்ல்ல? பத்து தடவை தோத்துப் போனாரே… இன்னுமும் திருந்தாத ஒருத்தர். அவர் சொல்றார்.
எடப்பாடியை விட்டு வர முடியுமா?
ஐயா அனுபவசாலி அவர்களே, உங்ககிட்ட ஒரே ஒரு கேள்வி ஒன்னு கேட்கிறேன். இந்த சேலத்துக்கு பக்கத்தில இருக்கிற அந்தத் தொகுதியில் மட்டுமே போய் பதுங்கிக்காம தமிழ்நாட்டில வேற ஏதாவது ஒரு தொகுதியில நின்னு உங்களால ஜெயிச்சுக் காட்ட முடியுமா? சாரி சாரி… முதல்ல நிக்க முடியுமா? முதல்ல அதை செஞ்சுட்டு அப்புறமா இந்த விஜயைப் பத்திப் பேசுங்க பாஸ். சும்மா நசநசன்னு… சொந்த தொகுதியிலயே தோத்துருவோம்னு பயந்துதான் நம்மளுடைய சின்னத்தையே திருடினவர் தானே?
அதனாலதான் நம்மளுடைய மன்றத்தில பல வருஷமா பயணிச்ச நம்ம சுயேச்சை வேட்பாளரோட சின்னத்தை நம்மளோடதான் அரவணைச்சு ஆதரிக்கிறோம். அதனால எடப்பாடி தொகுதி மக்களே, அந்த சுயேச்சை வேட்பாளரோட சின்னத்தில டிவி சின்னத்தில நீங்க ஓட்டு போடுறது நம்ம விசில் சின்னத்துக்கு நீங்க ஓட்டு போடுற மாதிரி. அதனால எடப்பாடி தொகுதி மக்களே தயவு செஞ்சு அதை மறந்துடாதீங்க.
ஆமாம் நடிகன் தான்
இந்த திமுகாவுக்கும் மற்றும் பலருக்கும் ஒரு காமன் ஓனர் ஒருத்தர் இருக்கிறார்ல்ல? யாரு? பாஜக. பாஜக மந்திரி ஒருத்தர் சொல்றாரு… ‘விஜய் என்னப்பா விஜய்… நடிகன்… விஜய் நடிகன்… விஜய் நடிகன்’. ஆமா நான் நடிகன் தான். இப்ப அதுக்கு என்ன? என்னமோ இவர் என்னமோ புதுசா கண்டுபிடிச்ச மாதிரி. ஆனால் நான் அரசியலுக்கு வந்துட்டு நடிக்கல. அரசியல்ல நான் நடிக்கல.
நீங்க என்ன பண்றீங்க? அரசியல்ல இருந்துகிட்டே நாடகம் மேல நாடகம் போடுறீங்களே? அப்ப உங்க எல்லாரையும் நாடக நடிகர்கள்னு சொல்லலாமா? ஒன்றிய அரசோட பவரை கையில வச்சுக்கிட்டு திமுகவோட ஒரு நாடகம், மற்றும் பலரோட ஒரு நாடகம்… அப்ப உங்க எல்லாரையும் ஒரு டேஞ்சரான நாடக கம்பெனின்னு சொல்லலாமா? இந்த பாஜகவோட சரண்டராக இருக்கிறதோட மட்டுமில்லாமல் இந்த ஊழல்லயே ஊறிப் போய், ஊறிப்போய், ஊறிப் போய் இருக்கிற இந்த ரெண்டு பேரும் நமக்கு வேணாம்ங்க.
புதுசா, பிரெஷ்ஷா ஒரு நல்லாட்சி கொடுக்கக்கூடிய, ஒரு மாற்றத்தைக் கொடுக்கக்கூடிய நம்மளுடைய தவெக-வை நாம எல்லாருமா சேர்ந்து கொண்டு வருவோம். நாம் எல்லாருமா சேர்ந்து கொண்டாடுவோம். இது ஒரு மாற்றத்திற்கான ஒரு தேர்தல். சும்மா மாத்தி மாத்தி ஓட்டு போட்டுக்கறதுக்கு பேர் மாற்றம் கிடையாது.
புதுசா பிரெஷ்ஷா ஒருத்தவங்களைக் கொண்டு வர்றதுக்கு பேர்தான் அந்த மாற்றம். இந்த போகி பண்டிகை அன்னைக்கு வீட்ல இருக்கிற வீணா போனதை எல்லாம் தூக்கி வீசி எறிவோம் தெரியுமா? அந்த மாதிரி இந்தத் தேர்தல்ல 75 வருஷ பவளவிழா பாப்பாவையும், 55 வருஷ பல்லாங்குழி பாப்பாவையும் தூக்கி வீசி எறிவோமா? ஒரு நியூ கவர்னன்ஸ், ஒரு குட் கவர்னன்ஸ் ஒன்னு கொண்டு வரலாமா? நீங்க இந்த திமுகக்கு ஓட்டு போடுறது, மற்றும் பலருக்கு ஓட்டு போடுறது, பாஜகவுக்கு ஓட்டு போடுறது… யாருக்கு ஓட்டு போட்டாலும் சுத்தி சுத்தி நீங்க பாஜகவுக்கு ஓட்டு போடுற மாதிரிதான். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிரான ஓட்டு.
எல்லோரும் ஒருத்தரை எதிர்ப்பது ஏன்?
நீங்க ஒன்னு கவனிச்சீங்களா? ஒட்டுமொத்தமா எல்லாருமா சேர்ந்து ஒருத்தனை எதிர்க்கிறாங்க. அதுக்கு என்ன காரணம்? ஏன் அப்படி எதிர்க்கணும்? இப்ப அவங்க அவங்க ஒரு தனித்தனி கூட்டணியில் இருந்தாங்கன்னா அவங்களுக்கு ஆப்போசிட்ல இருக்கறவங்களை எதிர்ப்பாங்க. ஆனா ஒட்டுமொத்தமா எல்லாருமா சேர்ந்து ஒருத்தனை எதிர்க்கிறாங்க. அதுக்கு என்ன காரணம்? ஒட்டுமொத்தமா எல்லாருமா சேர்ந்து ஒரே கூட்டணியில் இருக்கறாங்க!
என்ன தப்பு பண்ணிட்டான் இந்த விஜய்? மக்களுக்காக அரசியலுக்கு வந்தது ஒரு தப்பா? நல்லாட்சி கொடுக்கணும்னு நினைச்சது தப்பா? ஊழலை செய்யக்கூடாதுன்னு நினைச்சது தப்பா? லஞ்சமே வாங்கக் கூடாதுன்னு நினைச்சது தப்பா? பெண்களுக்குப் பாதுகாப்பு ஒழுங்கா இருக்கணும்னு நினைச்சது தப்பா? போதை பொருள் கலாச்சாரத்தை ஒழிக்கணும்னு நினைச்சது தப்பா? சட்டம் ஒழுங்கச் சரி செய்யணும்னு நினைச்சது தப்பா? விவசாயிகள் நல்லா இருக்கணும், மீனவர்கள் நல்லா இருக்கணும், உழைக்கிற மக்கள் எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைச்சது தப்பா? ஆனா மக்களே, நல்லா இருப்போம்… நல்லா இருப்போம்… எல்லாரும் நல்லா இருப்போம்! எப்படி? நல்லா இருப்போம்… நல்லா இருப்போம்… எல்லாரும் நல்லா இருப்போம்!
இந்த நேரத்துல ஒவ்வொரு வீட்ல இருக்கிற என்னுடைய குட்டி நண்பா, நண்பீஸுக்கு ஒரு ரிக்வெஸ்ட். உங்களுக்கு ஏதாவது ஒரு சாக்லேட்டோ இல்ல கிண்டர் ஜாய் வேணும் அப்படின்னா அழுது அடம் பிடிச்சு சக்சஸ் பண்ணிடுறீங்கல்ல? அந்த மாதிரி உங்களுக்கு ஏதாவது ஒரு டிரஸ் வேணும்னா அழுது அடம் பிடிச்சு சக்சஸ் பண்ணிடுறீங்கல்ல? அந்த மாதிரி உங்களுக்குப் பிடிச்ச இந்த விஜய் மாமாவுக்காக, இந்த விஜய் மாமா ஜெயிக்கணும்ன்றதுக்காக, நம்ம தமிழ்நாடு ஜெயிக்கணும்ன்றதுக்காக உங்க வீட்டில இருக்கிற உங்களுடைய அம்மா, அப்பா, சித்தி, சித்தப்பா, பெரியப்பா, பெரியம்மா… ஒவ்வொரு வீட்டில இருக்கிற ஓட்டு போடுற வயசுல இருக்கிற அண்ணா, அக்கா எல்லார்கிட்டயும் விசில் சின்னதுக்கு ஓட்டுப் போடச் சொல்லுங்க. சப்போஸ் யாராவது ஓட்டுப் போடாம வீட்ல உட்காந்துட்டு இருந்தாங்கன்னா அவங்க காதுலயே போய் அன்பா விசில ஊதி ஓட்டுப் போட ஓட வைங்க. விசிலுக்கு ஓட்டுப் போடுற வரைக்கும் விடாதீங்க.
அடுத்து இந்த ஓட்டுக்குக் காசு கொடுத்து இந்த சத்தியம் வாங்குறது எல்லாம் பொய் சத்தியம். பொய்யர்கள் வாங்குற சத்தியம். அதெல்லாம் நம்பாதீங்க. அடுத்து இந்த பாஜக வந்துரும்… பாஜக வந்துரும்… இந்த பூச்சாண்டி வேலை எல்லாம் சுத்தமா எடுபடாது. இந்த பாசிச சக்திகள் எல்லாம் சுத்தமா எடுபடாது. மக்கள் ஆல்ரெடி டிசைட் பண்ணிட்டாங்க. இந்த திமுகாவும் வேணாம், மற்றும் பலரும் வேணாம். முக்கியமா இந்த பாஜக வேணாவே வேணாம்!
அதனால ஸ்டாலின் சார், இந்தத் தேர்தல்ல… இந்தத் தேர்தலுக்கு அப்புறம் நீங்க தோத்ததுக்கு அப்புறம் எப்படி எல்லாம் பீல் பண்ணப் போறீங்கன்னு கொஞ்சம் சொல்லவா? ‘ஏன்டா இந்த விஜயைப் பாடாப்படுத்தனோம்? ஏன்டா இந்த விஜயை வேதனைப்படுத்தினோம்? ஏன்டா இந்த விஜய்க்கு எதிரா சதி செஞ்சோம்? ஏன்டா இந்த விஜய்க்கு எதிரா சூழ்ச்சி செஞ்சோம்?’னு நினைச்சு நினைச்சு நினைச்சு பீல் பண்ணப் போறீங்க. மக்களே உங்களை பீல் பண்ண வைக்கப் போறாங்க. நான் என்ன கெடுதல் செஞ்சுட்டேன் உங்களுக்கு? நீங்க சாப்பிடுற சாப்பாட்டிலையா மண்ணை அள்ளிப் போட்டேனா? உங்களுடைய ஆட்சியினுடைய லட்சணத்தை, உங்களுடைய ஊழலை, நீங்களும் மந்திரிகளும் அடிக்கிற கொள்ளையை மக்களுக்கு எடுத்துச் சொன்னேன். இதைச் சொல்லாம வேற என்னத்தை சொல்லுவாங்க?
என் மேல ஏன் பழிய போட்டீங்க
இப்ப கரூர் விஷயத்துக்கு வர்றேன். கரூர்ல என்ன நடந்ததுன்னு அந்த கரூர் மக்களைக் கேட்டாலே புட்டு புட்டு புட்டு வைப்பாங்க. என் மேல பழியைத் தூக்கிப் போடுறீங்க. என்னமோ நாங்க அரசியலே பண்ண மாட்டோம், இந்த விஷயத்துல எல்லாம் நாங்க அரசியலே பண்ண மாட்டோம்னு வீடியோ போட்டுட்டு போய் சட்டசபையில உட்காந்துிட்டு என் மேல பழியைத் தூக்கிப் போடுறீங்க. லேட்டா வந்துட்டாருன்னு. போலீஸ் கொடுத்த டைம்ல நாங்க இருந்தோம். நாமக்கல்ல இருந்து கரூர் வர்ற வழியில் இருந்த மக்கள் எல்லாரையும் நான் என்ன அம்போன்னு விட்டுட்டு வரச் சொல்றீங்களா? நாமக்கல்ல இருந்து கரூருக்கு நான் எப்படி வந்தேன், எவ்வளவு நேரத்தில வந்தேன்… உலகமே லைவ்ல பார்த்துக்கிட்டு இருந்தது. வாய்க் கூசாம என் மேல பழி தூக்கிப் போடுறீங்க. ஒரு மனசாட்சின்றது வேணாம்?
சரி, நீங்கதான் எதுவுமே பண்ணலல்ல சார்? அப்புறம் ஏன் சார் 20 வருஷமா கரூர்ல மட்டுமே… கரூர் பகுதியில மட்டுமே போட்டி போட்ட உங்களுடைய ஒரு அடிமையை… உங்களுடைய ஒரு அடிமையை ஏன் கோயம்புத்தூர் வரைக்கும் வரைக்கும் ஓட வச்சீங்க?
அதனால மக்களே, அத்தனை அத்தனை வழிகளையும் தாங்கிக்கிட்டு உங்களுக்காக நீதி கேட்க வந்த இந்த விஜய், இப்ப உங்ககிட்ட நீதி கேட்கிறேன். நீங்க தயவு செஞ்சு எனக்கு நீதி வழங்கணும். எப்படி வழங்கணும்? நாளை மறுநாளைக்கு, ஏப்ரல் 23-ஆம் தேதி சும்மா காலங்காத்தால பக்காவா ரெடி ஆயிட்டு, ஓட்டர் ஐடி கார்டை கையில எடுத்துக்கிட்டு, வீட்டில இருக்கிற சாமியெல்லாம் நல்லா கும்பிட்டுட்டு, உங்க பக்கத்து வீட்டுக்காரங்க எதிர் வீட்டுக்காரங்க அங்கிள், ஆன்ட்டி எல்லாரையும் சந்தோஷமா கூட்டிட்டு முதல்ல பூத்துல போய் நின்னு அந்த விசில் சின்னத்துக்கு நேரா இருக்கிற அந்த பட்டனை ஒரு அழுத்து அழுத்துங்க.
இது ஒரு தலைமுறைக்கான தேர்தல். இது உங்களுக்கான தேர்தல். அத்தனை வழிகளையும் தாங்கிக்கிட்டு உங்களுக்காக மட்டுமே வந்திருக்கிறேன். உங்களுக்காக நன்றி கடன் செலுத்துவதற்காக மட்டுமே வந்திருக்கிறேன். ஒரு நாளும் பொய் சொல்லி உங்களை நான் ஏமாத்த மாட்டேன்.
திமுக vs தவெக
கடைசியா இந்த நாலு முனை போட்டி, 40 முனை போட்டி… எத்தனை முனை போட்டி எத்தனை உருட்ட உருட்டினாலும் இங்க இரண்டு முனை போட்டிதான். ஒன்னு டிவிகே, இன்னொன்னு திமுக. மக்கள் விரோத ஆட்சி நடத்துற ஸ்டாலின் சார் வேணுமா? மக்களை நேசிக்கிற இந்த விஜய் வேணுமா? அவ்வளவுதான் இந்த எலக்ஷன். அதனால உங்க பிள்ளைக்கு, உங்க மகனுக்கு, உங்க அண்ணனுக்கு, உங்க தம்பிக்கு, உங்க விஜய்க்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க. தயவு செஞ்சு விசில் சின்னத்துக்கு ஓட்டுப் போடுங்க. இது ஒரு விசில் புரட்சி தேர்தலா இருக்கணும்.
மே நாலாம் தேதி அந்த ரிசல்ட் வர்ற டே ரொம்ப ஸ்பெஷலான டே அப்படின்னு ஸ்டாலின் சார் சொன்னாங்க. ஆமா ஆமா ஸ்பெஷலான டே தான். அக்னி நட்சத்திரம் ஸ்டார்ட் ஆகுற டே, அந்த கத்திரி வெயில் மண்டையைப் பொளக்கும். அது மக்களுக்கு ஆகவே ஆகாது. நம்பிக்கை உள்ள மக்கள் யாரும் நல்ல காரியங்கள் அந்த அக்னி நட்சத்திரம் டைம்ல செய்யவே மாட்டாங்க. சூரியன் பட்டா சன் ஸ்ட்ரோக் வரும். எப்படா இந்தச் சூரியன் மறையும், எப்படா இந்தச் சூரியன் ஒழியும்னு குழந்தையிலிருந்து பெரியவங்க வரைக்கும் அந்தச் சூரியனை வெறுத்து ஒதுக்குவாங்க. அதுதான் இண்டிகேஷன். அதுதான் அந்த ரிசல்ட்டுக்கான இண்டிகேஷன்.
மக்களே நாளை மறுநாளைக்கு ஏப்ரல் 23-ஆம் தேதி… அன்னைக்கு ஒரு நாள் மட்டும் இந்த விஜய் சொல்றதைக் கேளுங்க. கேட்டுட்டு தயவு செஞ்சு விசில் சின்னத்துக்கு ஓட்டுப் போடுங்க. அடுத்து வர்ற அஞ்சு வருஷம்… அது என்ன அஞ்சு வருஷம்? அடுத்து வர்ற எல்லா வருஷமும் நீங்க சொல்றத நான் கேக்கறேன். நீங்க சொல்றத இந்த விஜய் கேட்பான். கான்ஃபிடன்ட்டா இருங்க. நல்லதே நடக்கும்” என இறுதி கட்ட பிரச்சாரத்தில் அனல் பறக்க பேசினார்.
