பெண்கள் இடஒதுக்கீடு மசோதா விவகாரத்தில் மோடி, அமித்ஷாவின் பாட்டனுக்கே எங்களைக் குறை சொல்ல யோக்கியதை இல்லை என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. சாடியுள்ளார்.
சென்னை சிந்தனையாளர் மன்றம் நேற்று ஏப்ரல் 20-ந் தேதி சென்னையில், ”தொகுதி மறுவரையறை.. பெரிய வெற்றி தமிழ்நாட்டுக்கு! பெருந்தோல்வி ஒன்றிய அரசுக்கு! ஏன் – எப்படி?” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தியது.

இக்கருத்தரங்கில் ஆ.ராசா எம்.பி, ‘தி இந்து’ குழும இயக்குநர் என்.ராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் ஆ.ராசா எம்.பி. பேசியதாவது:
பெண்களுக்கான இட ஒதுக்கீடு, அதை வந்து தமிழ்நாட்டில் மறுத்துவிட்டார்கள். ஸ்டாலின் மறுத்துவிட்டார், தமிழ்நாடு மறுத்துவிட்டது… இவர்களுக்குத் தண்டனை கொடுங்கள். சொல்லுவது யார்? மோடி!
மோடிக்கு பாட்டன் பூட்டன் எல்லாம் இருந்தாங்க. பிஜேபி-க்கு பாட்டன் பூட்டன் எல்லாம் ஜனசங்கம், அப்புறம் அதுக்கு முன்னாடி ஆர்.எஸ்.எஸ் எல்லாம் இருந்தாங்க. நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள்.
1952-இல் அரசியல் சட்டத்தை எழுதிய அம்பேத்கர் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த சட்டம் ‘இந்து கோட் பில்’ (Hindu Code Bill). அந்த ‘இந்து கோட் பில்’-ல தான் பெண்ணுக்குச் சொத்துரிமை (Property Rights). அந்த ‘இந்து கோட் பில்’-ல தான் ரைட் டு டைவர்ஸ் (Right to Divorce), ரைட் டு அடாப்ஷன் (Right to Adoption), ரைட் டு கெட் மெயின்டனன்ஸ் (Right to get Maintenance). அதுவரைக்கும் இல்லை.
ஜீவனாம்சம் பெறுகிற உரிமை, சொத்திலே சம பங்கு, மணவிலக்கு பெறுகிற உரிமை, தத்தெடுக்கிற உரிமை… இவையெல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு வந்த பில்தான் ‘இந்து கோட் பில்’. அந்த ‘இந்து கோட் பில்’-ல நேரு விரும்பினார். இந்து சமூகத்தில் ஒரு மாற்றம் வர வேண்டும், ஒரு பகுத்தறிவுச் சிந்தனை வளர வேண்டும் என்றால், பழமை ஒழிய வேண்டும் என்று சொன்னால் இவையெல்லாம் கொண்டு வரப்பட வேண்டும் என்று நேருவே விரும்பினார்.
இந்தியாவினுடைய அரசியல் சட்டத்தை எழுதின அம்பேத்கர் அந்தச் சட்டத்தைப் பைலட் (Pilot) பண்ணார், பேசினார். அறிமுகப்படுத்தப்பட்டது மசோதா. ஆனால், அன்றைக்கு இருந்த ஆர்.எஸ்.எஸ், சியாம பிரசாத் முகர்ஜி உட்பட, ஏன்… குடியரசுத் தலைவராக வந்த ராஜேந்திர பிரசாத் உட்பட… ஏற்றுக்கொள்ளவில்லை. எல்லோரும் எதிர்த்தார்கள்.
இது இந்து சமுதாயத்தில்… சரி, சொல்லிட்டுப் போகட்டும். ஆனால் இன்றைக்குச் சொல்லுகிறாரே மோடி, நான் சொல்லுகிறேன் உங்களுக்கு மட்டுமல்ல, அமித் ஷாவுக்கு மட்டுமல்ல… உங்கள் பாட்டனுக்கே எங்களைக் குறை சொல்ல யோக்கியதை இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
ஏனென்றால் அந்தச் சட்டத்தை எழுத முடியாமல் வெளியே வந்தார் (அம்பேத்கர்). ஏன் முடியாமல் வெளியே வந்தார் என்று சொல்வதற்கு முன்னாடி, ஆர்.எஸ்.எஸ்-ன் ‘அபிஷியல் ஸ்டேட்மெண்ட்’ (Official Statement), பிரஸ் ரிலீஸ்-ஐ (Press Release) போய்ப் பாருங்கள் வெப்சைட்டில் (Website).
‘இந்த இந்து கோட் பில், இந்து சட்ட மசோதா என்பது நிறைவேற்றப்பட்டால், அது இந்து சமூகத்தின் மீது வீசப்பட்ட அணுகுண்டு’ – எது? பெண்ணுக்குச் சொத்தில் பங்கு கொடுத்தால், பெண்ணுக்கு மண உரிமை கொடுத்தால், மண முறிவு உரிமை கொடுத்தால், தத்தெடுக்கும் உரிமை கொடுத்தால், விதவை மறுமணத்திற்கு உரிமை கொடுத்தால்… இதையெல்லாம் கொடுத்தால் அது இந்து சமூகத்தைப் பாதிக்கும், இந்து மதத்தின் மீது வீசப்பட்ட அணுகுண்டு.
இப்ப டீலிமிடேஷன் முடியறதுக்கு முன்னாடியே, முடியும்போது நீங்க என்ன பண்றீங்க? கான்ஸ்டிடியூஷன் அமெண்ட்மெண்ட் கொண்டு வர்றீங்க. அந்த கான்ஸ்டிடியூஷன் அமெண்ட்மெண்ட் பில்ல என்ன சொல்றீங்கன்னா, அந்த நம்பர் வந்து ‘The House of the People shall consist…’. இப்ப இந்த பில்ல செக்ஷன்-3 (Section 3), இந்த ஆர்டிகிள் அரசியலமைப்பு சட்டத்தோட 81-வது பிரிவை திருத்துறாங்க. ஏன்னா அரசியலமைப்பு சட்டத்தோட 81-வது பிரிவு 545-ன்னு சொல்லுது.
இப்ப என்ன திருத்த போறாங்கன்னா – அதாவது பாருங்க, டீலிமிடேஷன் ப்ராசஸ் ஆகுதா என்னன்னே தெரியல, உள்ள பொறக்கப்போகுதா என்னன்னே தெரியல, ஆம்பள பிள்ளையா பொம்பள பிள்ளையான்னும் தெரியல… ஆனா அதுக்கு முன்னாடியே பேர் வைக்க ரெடி ஆயிட்டாங்க!
In Article 81 of the Constitution, for clause (1), the following clause shall be substituted, namely: “The House of the People shall consist of not more than 888 members chosen by direct election from territorial constituencies in the states.”
டீலிமிடேஷன்ல இன்னும் எத்தனைன்னு அவங்க முடிவு பண்ணல, முடிவு பண்ண வேண்டியது கமிஷன். நான் அதான் கேட்டேன், ஒரு சட்டத்துக்கு கீழ ஒரு ஆணையாளரைப் போட்டீங்க, அந்த ஆணையாளர்தான் எத்தனை மெம்பர்ன்னு முடிவு பண்ணனும். மெம்பர் முடிவு பண்றதுல அந்த நம்பருக்கு வரையறை சொல்லணும். நீங்க பெரம்பலூர் கான்ஸ்டிடியூயன்சி, நீலகிரி கான்ஸ்டிடியூயன்சின்னா அதுல எத்தனையா பிரிப்பீங்கன்னு சொல்லணும். அப்ப தொகுதியினுடைய எல்லையை சொல்லணும், எத்தனை நம்பர்ன்னு சொல்லணும். சொன்னதுக்கு அப்புறம்தான் அரசியலமைப்பு சட்டத்தை திருத்தணும்.
முதல் கேள்வி, 888-ன்னு இன்னும் உள்ள போகவே இல்ல… இந்தியாவுக்குள்ள கமிஷன் போகவே இல்ல. இந்த 888-ன்னு சொன்ன அந்த ஆளு யாருன்னு கேட்டேன்? எங்க இருந்து அந்த நம்பர் வந்துச்சுன்னு கேட்டேன்? 888-ன்னு ஒரு நம்பர் சொன்னாங்களே, அது என்ன அஸ்ட்ராலஜியா? அஸ்ட்ரானமியா? இல்ல நியூமராலஜியா? என்னய்யான்னு கேட்டேன். அதெல்லாம் கேட்கக்கூடாது! சரி விட்டுருங்க.
இந்த அயோக்கியத்தனம் இங்க மட்டும் இல்ல, உலகத்துல நாங்க ஆங்கிலோ-சாக்ஸன் ஜூரிஸ்ப்ருடன்ஸ் (Anglo-Saxon Jurisprudence) ஃபாலோ பண்றோம். இங்கிலாந்து எங்கெங்கெல்லாம் ஆட்சி செஞ்சதோ, அந்த சட்டத்தின் அடிப்படையில நாம வந்துட்டு இருக்கோம். அந்த மாதிரி நாடாளுமன்றத்துல, எந்த நாடாளுமன்றத்துல (சுமார் 50-க்கும் 60-க்கும் மேற்பட்ட நாடாளுமன்றங்கள்ல இங்கிலாந்து சட்டம்தான் இருக்கு), ஒரு நாடாளுமன்றத்துல கூட இந்த அயோக்கியத்தனம் நடந்தது இல்ல! அந்த அயோக்கியத்தனத்தைச் செய்தது நீங்கள்தான்… அமித் ஷாதான்… மோடி அரசுதான்.
இந்தியா வந்து உங்களுக்கு தெரியும், ப்ராவின்ஸாதான (Province) பிரிச்சிருந்தாங்க. ப்ராவின்ஸ்தானே… கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா வரைக்கும் இது வந்து மெட்ராஸ் பிரசிடென்ஸி (Madras Presidency). மே பி மெட்ராஸ் பிரசிடென்ஸி இருந்தது. அது மாதிரி பல பிரசிடென்ஸி இருந்தது.
1952-ல இருந்து 56-ல தான் மொழிவாரி மாநிலம்ங்கிற தத்துவத்தை அம்பேத்கர் கொண்டு வந்தார். இந்தியாவை… திரும்பவும் அங்கதான் போகணும். நீங்க வந்து ‘We, the people of India, having solemnly resolved to constitute India into a Sovereign, Secular, Socialist, Democratic Republic’… மனப்பாடம் இருக்கணும். இது ஒரு இறையாண்மை உள்ள நாடு, இது வந்து சுதந்திர நாடு, ஜனநாயக நாடு, சமதர்ம நாடு, மதச்சார்பற்ற நாடு.
அப்போ இதுல எல்லாத்துக்கும் எல்லா உரிமையும் இருக்கு. இப்படி ஒரு நாடு இருக்கணும்னா என்ன பண்ணனும்னு முடிவு பண்ணாங்கன்னா, அம்பேத்கர் மற்றும் அருணோதயம்… எப்படி பிரிக்கிறது? சின்ன சின்ன ஸ்டேட்டா பிரிக்கலாமா? 400 சதுர கிலோமீட்டர் ஒரு ஸ்டேட்னு பிரிச்சிரலாமா? நோ! அப்போ ஒரு முஸ்லிம் மக்கள் எல்லாம் முஸ்லிம் ஒரு மாநிலமா பிரிச்சு விட்டுரலாமா? நோ!
அப்போதான் என்ன வந்ததுன்னா, மொழிதான் ஒரு மிகப்பெரிய ரோலை (Role) வச்சிருந்தது. மிகப்பெரிய தாக்கத்தை வச்சிருக்கு. அப்போ மொழிவாரி மாநிலங்கள்தான் அமைய வேண்டும். மொழிவாரி மாநிலங்கள் அமைந்தால்தான் அந்த மொழிக்கு உள்ள சிறப்பு, அந்த மொழிக்கு உள்ள பாரம்பரியம், அந்த மொழியால் ஏற்பட்டிருக்கிற இலக்கியங்கள், அந்த இலக்கியத்தால் உருவாக்கப்பட்டிருக்கிற பண்பாடு, அந்த பண்பாடு கொண்டிருக்கிற வரலாறு, அந்த வரலாற்றில் சொல்லப்பட்டிருக்கிற தொன்மங்கள் – இவ்வளவு வரணும்.
56-ல அவர் கொண்டு வந்ததுதான் ‘ஸ்டேட் ஆர்கனைசேஷன் பில்’ (State Reorganisation Bill). அதுல உருவானதுதான் இத்தனை மாநிலம். அப்புறம்தான் ஆந்திரா பிரிஞ்சது, எல்லாம் இப்ப உத்தரப்பிரதேசம் ரெண்டா பிரிஞ்சது, மூணா பிரிஞ்சது, தெலுங்கானா பிரிஞ்சது… இப்படி எல்லாம் பிரிவதற்கு காரணம் அந்த சட்டம்தான்.
56-க்கு முன்னாடி 52-ல அவர் ஒரு புத்தகம் எழுதினார், நல்லா படிங்க, ‘Thoughts on Linguistic States’ (மொழிவாரி மாகாணங்கள் பற்றிய சிந்தனை). அவருக்கு என்ன கவலைன்னா, இந்தியா அப்படியே இருக்காது, சிதறுண்டு போகும். அவர் இன்னொன்னு சொல்லியிருக்கார்… இந்தியா சுதந்திரம்னா யாராலயும் முடியாது, திராவிடர்களுக்கு மட்டும்தான் இந்த நாடு சொந்தம்னு சொன்னார். பாத்தீங்களா? தெளிவா சொல்றார்… இந்த நாடு யாருக்காவது சொந்தம் என்றால், ஒரு இனத்துக்கு சொந்தம் என்றால், அது திராவிடர்களுக்கும் தமிழர்களுக்கும் மட்டும்தான் சொந்தம்.
ஆ.ராசா உரை முழுமையாக:
