பெட்ரோல் டீசல் விலை உயர்வு.. பேரிடி வெயிட்டிங்.. 2022 போல ‘சம்பவம்’ செய்ய போகும் எண்ணெய் நிறுவனங்கள்?

Published On:

| By Mathi

fuel price 2022

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் (fuel) விலை உயர்வு குறித்த செய்திகள், வரும் நாட்களில் அடுத்தடுத்து வெளியாகும் சூழ்நிலை உள்ளது என்கின்றனர் பொருளியல் வல்லுநர்கள்.

மேற்கு ஆசியாவின் போர்ச் சூழ்நிலை காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 1 பேரலுக்கு 110 அமெரிக்க டாலரை கடந்துள்ளது.

ADVERTISEMENT

எரிபொருள் (fuel) சிக்கனம்

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அண்மை காலமாக, “பெட்ரோல் டீசல் சிக்கனத்தை” வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது (Hike).

கடந்த 5 நாட்களுக்கு முன்னதாக 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ3 அளவுக்கு உயர்த்தப்பட்டது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் 1 லிட்டர் பெட்ரோல் விலை 90 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன.

இதேபோல இனி வரும் நாட்களிலும் பெட்ரோல் விலை சிறிய அளவில் அடுத்தடுத்து உயர்த்தப்பட வாய்ப்புள்ளது என்கின்றன எண்ணெய் நிறுவன அதிகாரிகள்.

ADVERTISEMENT

2022-ம் ஆண்டு போல?

கடந்த 2022-ம் ஆண்டு ரஷ்யா- உக்ரைன் யுத்தம் நடைபெற்ற போது இதேபோல பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. அதுவும் ஒரே நாளில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை அறிவிக்காமல் 13 நாட்களில் 15 முறை பெட்ரோல் டீசல் விலை உயர்வு அமல்படுத்தப்பட்டது. அதே போல தற்போதும் பெட்ரோல் டீசல் விலையை சிறிது சிறிதாக எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தக் கூடும் என்கிற அபாயம் இருப்பதையே இன்றைய 90 காசு விலை உயர்வு வெளிப்படுத்துகிறது.

தனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share