சென்னையில் இன்று (மே 19) அதிகாலை முதல் 5க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். கார்களை வாங்கி விற்கும் பைனான்சியர் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை என தகவல் வெளியாகியுள்ளது.
வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்தல், சட்டவிரோத பண பரிவர்த்தனை உள்ளிட்ட புகார்கள் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அயனாவரம் மற்றும் திருமங்கலம் பகுதிகளில் அமலாகத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
