எடப்பாடிக்கு எத்தனை மா.செ.க்கள் ஆதரவு? இன்றைய கூட்டத்தில் ரிசல்ட்!

Published On:

| By Mathi

EPS AIADMK

அதிமுகவின் (AIADMK) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) தலைமையில் சென்னையில் இன்று மே 19-ந் தேதி நடைபெறுகீறது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 22 எம்.எல்.ஏக்கள்; எஸ்பி வேலுமணி தலைமையில் 25 எம்.எல்.ஏக்கள் என அக்கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது. சட்டசபையில் எந்த பிரிவு உண்மையான அதிமுக? என்பது குறித்து சபாநாயகர் ஆய்வு செய்து வருகிறார்.

ADVERTISEMENT

மேலும் கட்சி உத்தரவை மீறி விஜய் அரசுக்கு ஆதரவளித்த 25 எம்.எல்.ஏக்களின் அதிமுக கட்சி பதவிகளை பறித்து புதிய மாவட்ட செயலாளர்களையும் எடப்பாடி பழனிசாமி நியமித்தார்.

இரண்டாக பிளவுபட்ட அதிமுக

இதனிடையே சட்டசபை தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை எஸ்பி வேலுமணி அணி வலியுறுத்தி வருகிறது. இதற்காக அதிமுக பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என அக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களிடம் எஸ்பி வேலுமணி அணி கையெழுத்து பெற்று வருகிறது.

ADVERTISEMENT

இதற்கு போட்டியாக எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு ஆதரவாகவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுக்குழு உறுப்பினர்களிடம் மாவட்ட செயலாளர்கள் கையெழுத்து பெற்று வருகின்றனர்.

சென்னையில் மா.செ.க்கள் கூட்டம்

இந்நிலையில் சென்னையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி கூட்டியுள்ளார். இந்தக் கூட்டத்தில் கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

ADVERTISEMENT

இன்றைய கூட்டத்தில் எடப்பாடி தலைமையை ஏற்று எத்தனை மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கின்றனர்? என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share