ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் அவரது 23-வது படம் குறித்து, புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிவகார்த்திகேயன் தற்போது அவரது 21-வது படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் ராணுவ வீரராக நடிப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தன்னுடைய 23-வது படத்திற்காக அவர் இயக்குநர் முருகதாஸுடன் கைகோர்த்துள்ளார். இந்த நிலையில் இப்படத்தின் ஹீரோயின் மற்றும் பிற நடிகர்கள் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.

அதன்படி இதில் ரசிகர்களின் மனங்கவர்ந்த மிருணாள் தாகூர் ஹீரோயினாக நடிக்க இருக்கிறாராம். வில்லனாக பாலிவுட் நடிகர் வித்யூத் ஜம்வாலை நடிக்க வைத்திட பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
இதேபோல மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலையும் இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க வைத்திட, பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

முழுக்க, முழுக்க மாஸ் ஆக்ஷன் காட்சிகளுடன் இப்படத்தின் கதையை முருகதாஸ் உருவாக்கி வருவதாகவும், மார்ச் நடுவில் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.
தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘SK 21’ படத்தின் 9௦% ஷூட்டிங் முடிவுக்கு வந்து விட்டது. சிவகார்த்திகேயன் பிறந்தநாளான பிப்ரவரி 17 அன்று படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
