எந்தக் கட்சியில் இருக்கிறார் செல்வப்பெருந்தகை? – அமைச்சர் விஸ்வநாதன்

By Pandeeswari Gurusamy

|

Published on 15 Nov 2026, 12:50 PM

செல்வப் பெருந்தகை எந்த கட்சியில் இருக்கிறார் என அமைச்சர் விஸ்வநாதன் கேள்வி எழுப்பி உள்ள சம்பவம் அக்கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஸ்வநாதன் , “காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர் சோனியா காந்தி எழுதியுள்ள புத்தகம் உலக அளவில் முக்கியத்துவம் பெற்று வருகிறது. இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்களும், உலக அரசியல் தலைவர்களும் சோனியா காந்தியின் புத்தகத்தை வாங்கிப் படிக்க ஆர்வமாக உள்ளனர். இந்தியாவில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் கூட்டணி அரசாங்கத்தில் உள்ள முதலமைச்சர்கள் வரும் திங்கட்கிழமை டெல்லியில் நடைபெறும் ரெவ்யூ மீட்டிங்கிற்கு செல்ல இருப்பதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. அந்த அடிப்படையில், தமிழகத்தின் முதல்வர் ஜோசப் விஜய் கலந்து கொள்ளக்கூடும் என்று கருதுகிறேன். என்றார்.

ADVERTISEMENT

தொடர்ந்து, ‘சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் இன்னும் கவனம் தேவை’ என்று செல்வப்பெருந்தகை கூறியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், “செல்வப்பெருந்தகை சட்டம்-ஒழுங்கு கவனம் என்று எதைச் சொல்கிறார். எந்தக் கட்சியிலிருந்து சொல்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. இப்போது அவர் எந்தக் கட்சியில் இருக்கிறார் என்பதும் எனக்குத் தெரியவில்லை. முதலில் அவர் எந்தக் கட்சிக்குப் போகப் போகிறார் என்பதைச் சொல்லட்டும்; அதன் பிறகு அதற்குப் பதில் சொல்லலாம்” என்றார்.

மேலும், தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “தமிழ்நாடு பெண்கள் தெய்வமாக மதிக்கப்படுகின்ற மாநிலம். தமிழகத்தின் முதல்வர் விஜய், பெண்களைத் தன் உயிரினும் மேலாக, தன் உடன்பிறந்த சகோதரிகளாக நினைக்கின்ற உயர்ந்த மனிதர். இந்த அரசு முழுக்க முழுக்கப் பெண்களின் பாதுகாப்பின் மீது அக்கறை செலுத்துகிற அரசு; பெண்களுக்கு உரிய மரியாதை கொடுக்கும் அரசு. முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் பெண்களுக்குத் துணையாக இருக்கவே நாங்கள் விரும்புகிறோம்” என்றார்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel