தமிழ்நாட்டை தவெகவால் வெற்றிகரமாக வழி நடத்த முடியுமா? – சுப்பராயன் எம்.பி

By Pandeeswari Gurusamy

|

Published on 15 Nov 2026, 10:06 AM

மத்திய- மாநில உறவுகள் குறித்து விரிவாக ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக, கடந்த 2025 ஏப்ரல் மாதம் திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டகுரியன் ஜோசப் குழுவை தவெக அரசு கலைத்தது என்பது ஒரு குற்றச்செயலாகவே கருத வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்பி சுப்பராயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “குரியன் ஜோசப் குழுவைக் கலைத்து ஆணை பிறப்பித்த தவெக அரசின் செயல், தமிழ்நாட்டு நலனுக்கு எதிரானது மட்டுமல்ல, போதுமான அதிகாரமின்றி அல்லலுறும்ஒட்டுமொத்த மாநிலங்களின் நலன்களுக்கே எதிரானதாகும்
இது ஒரு குற்றச் செயலாகவே கருத வேண்டியுள்ளது!!

ADVERTISEMENT

எந்த சட்டத்தையும் நம்மால் இயற்ற முடிவதில்லை!
ஒரு நல்ல, ஆக்கபூர்வமான பரிந்துரைகளைக்கொண்டதாக அது அமைந்திருக்கும்!

ஒன்றிய அரசின்அதிகாரக் குவியலுக்கு எதிராகப் போராட நல்ல ஆயுதமாக அந்தப்பரிந்துரைகள் பயன்பட்டிருக்கும்!
அதிகாரப் பற்றுக்குறையால், மக்களுக்கான காரியங்களை விரைவாக ஆற்ற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் நாட்டை, தவெக வால் வெற்றிகரமாக வழிநடத்த முடியுமா?
காலம் தான் பதில் சொல்லும்!” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel