முதல்வர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு குறித்து அதிருப்தி தெரிவித்த தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய செல்வப்பெருந்தகை, “சாமானியராகச் சொல்ல வேண்டும் என்றால், சட்டம் ஒழுங்கு இன்னும் பலப்படுத்தப்பட வேண்டும். திருப்தி அடையும் வகையில் இல்லை. திரைப்படத்தில் அவர் என்னென்ன வசனங்கள் சொன்னாரோ, முதலமைச்சர் அதை நிஜ வாழ்க்கையில் செயல்படுத்த முடியாது என்பதற்குப் பல முன்னுதாரணங்கள் இருக்கின்றன. திரைப்படம் வேறு. பொது வாழ்க்கை என்பது வேறு. திரைப்படத்தில் சொன்னதை எல்லாம், செய்ததை எல்லாம் நிஜ வாழ்க்கையில் செய்ய முடியாது என்பதற்கு இந்த 6 மாத ஆட்சி ஒரு சாட்சி. ஆகவே, இன்னும் சட்டம் ஒழுங்கைப் பலப்படுத்த வேண்டும்” என கூறியிருந்தார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மாணிக்கம் தாகூர், “அது அவருடைய தனிப்பட்ட கருத்துங்க. அவர் எந்த பொறுப்புலயும் இல்ல. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரா நான் சொல்றேன், சட்டம் ஒழுங்கு தெளிவா இருக்கு தமிழ்நாட்டுல. திமுகவினுடைய ஆட்சியில் நடந்த கொள்ளைகள், கொள்ளைகளுக்கு கம்பேர் பண்ணும்போது இப்ப குறைஞ்சிருக்கு. நான்கு மாதத்துல அரசாங்கம் நல்லபடியா நடந்துட்டு இருக்கு, நேர்மையான ஆட்சி நடந்துட்டு இருக்கு. நேர்மையான ஆட்சியை பார்க்கிறவங்களுக்கெல்லாம் பயமா இருக்கும். யாரெல்லாம் திருட்டுத்தனம் பண்ணாங்களோ, யாரெல்லாம் காசு வாங்கினாங்களோ, யாரெல்லாம் ஊழல் பண்ணாங்களோ அவர்களுக்கெல்லாம் பயமா இருக்கும். அவர்கள் எல்லாம் இப்படித்தான் புலம்பிக்கிட்டு இருப்பாங்க” என்றார்.










