ஜெயலலிதாவை விடுவித்தது சரியே: சென்னை உயர் நீதிமன்றம்!

By Kavi

|

Published on 14 Nov 2026, 6:09 PM

செல்வ வரி வழக்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் விடுவித்தது சரிதான் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல ஆண்டுகளாக செல்வ வரி கட்டவில்லை என்று வருமான வரித்துறை அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்தது. 

ADVERTISEMENT

இந்த வழக்கிலிருந்து விடுவிக்க கோரி ஜெயலலிதா வருமான வரி மேல்முறையீட்ட தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை ஏற்று அவரை விடுவித்து தீர்ப்பாயம் உத்தரவிட்டது. 

இந்த உத்தரவை எதிர்த்து வருமான வரித்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2008 முதல் 2009 வரை மூன்று வழக்குகள் தாக்கல் செய்தது. 

ADVERTISEMENT

இந்த வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்தன. இந்த சூழலில் ஜெயலலிதாவின் சட்டபூர்வ வாரிசுகளாக தீபா தீபக் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். 

இதில் தீபக் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுதர்சனம், ஆவணங்களை முறையாக ஆய்வு செய்த பிறகுதான் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. எனவே வருமான வரித்துறை வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

ADVERTISEMENT

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி அனிதா சுமந்த் தலைமையிலான அமர்வு, ஜெயலலிதா வீட்டில் சசிகலா உள்ளிட்டோர் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இந்த செல்வங்கள் யாருக்கு சொந்தமானவை என்பதை வருமானவரித்துறை கண்டுபிடிக்க முடியாத நிலையில், ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தது தவறு. வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ஜெயலலிதாவை விடுவித்து பிறப்பித்த உத்தரவு சரிதான் என்று கூறி வருமான வரி துறை தாக்கல் செய்த மூன்று மேல்முறையீட்டு வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel