காதோடு காதாகப் பேச்சு… செங்கோட்டையன் – வேலுமணி சந்திப்பு!

By Kavi

|

Published on 14 Nov 2026, 3:56 PM

தமிழக வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையனும், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் சந்தித்துப் பேசிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் நடைபெற்ற திருமண விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இருவரும் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

அப்போது இருவரும் சிரித்தப்படி நீண்ட நேரம் பேசிக்கொண்டனர். ஒருவருக்கு ஒருவரு காதோடு காதாக பேசிய வீடியோவும் வெளியாகியுள்ளது. 

இந்தச் சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளருமான மகேந்திரன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

ADVERTISEMENT

ஏற்கெனவே அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகள், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அதிருப்தி உள்ளிட்ட அரசியல் சூழலில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

குறிப்பாக அதிமுகவில் இருந்துபோது எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் செங்கோட்டையன். தற்போது அமைச்சராக இருக்கும் அவர் அதிமுகவில் இருந்து மேலும் சில முக்கிய நிர்வாகிகள் தவெகவுக்கு வரலாம் என்று கூறி வந்தார். 

ADVERTISEMENT

அதேபோன்று எஸ்.பி.வேலுமணி, சிவி சண்முகம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் எடப்பாடி மீது அதிருப்தியில் இருக்கின்றனர். இதில் எஸ்.பி வேலுமணி, அதிமுகவில் இருந்து வெளியே சென்று மாற்றுக் கட்சியில் இருப்பவர்களையும் மீண்டும் அதிமுகவுக்கு அழைக்க வேண்டும் என்று கட்சித் தலைமைக்கு கோரிக்கை வைத்து வருகிறார். 

இதுபோன்ற சூழலில் அமைச்சர் செங்கோட்டைன் அதிமுகவில் முக்கிய நிர்வாகியாக இருக்கும் எஸ்.பி.வேலுமணி  சந்திப்பு அரசியல் ரீதியாகப் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

முன்னதாக கோவையில் நடந்த மற்றொரு திருமண விழாவில் எஸ்.பி.வேலுமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்தித்து பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel