வைஃபை ஆன் செய்ததும், “அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்குமா இடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா”ன்னு பாடலை ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னங்க ப்ரோ.. யாருக்கு சோதனை மேல் சோதனையாம்?
ப்ரோ.. சோதனையோ வேதனையோ.. நமக்கு வந்த தகவலை ஷேர் பண்றேன் ப்ரோ..
தமிழ்நாட்டுல இதுவரைக்கும் இல்லாத வகையில “தீபாவளி கொலைகள்”ன்னு பேசிகிட்டு இருக்கிறாங்க.. இந்த தீபாவளிக்கு எத்தனை கொலைகள், போன தீபாவளிகளுக்கு எத்தனை கொலைகள்னு பட்டிமன்றத்துல பேசுற மாதிரியே அமைச்சர் ராஜ்மோகன் பேசப் போக இன்னைக்கு வரைக்கும் சர்ச்சையாகிட்டுதான் இருக்கு..
இங்கே தீபாவளி கொலைகள், மூதாட்டிகள் கொலைகள், சிறுமிகள் மாயம், தவெக எம்.எல்.ஏ.வின் ஆபாச மெசேஜ், தவெக நிர்வாகிகளின் பாலியல் சீண்டல், நகைகடையே வாரி சுருட்டிய கொள்ளைன்னு வரிசைகட்டி ஏகப்பட்ட அக்கப்போர் நடந்துகிட்டு இருக்கும் போதுதான் தமிழ்நாட்டின் ‘சட்டம் ஒழுங்கு’ நிலவரம் பற்றி ஆளுநரிடம் அறிக்கை கேட்குது டெல்லின்னும் தகவல் பரவுச்சு..
அதே சூட்டோட, டெல்லியில உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஆளுநர் அர்லேகர் சந்திச்சு பேச ’கள நிலவரம்’ ரொம்பவே ‘களேபரமாகிட்டு’ இருக்குங்க ப்ரோ..
ஆஹா.. அமித்ஷா- ஆளுநர் சந்திப்பால என்ன எஃபெக்ட் ப்ரோ?
இதை பத்தி டெல்லி தரப்பில விசாரிச்சா அவங்களோ பரபரப்பான தகவலை சொல்றாங்க ப்ரோ.. அதாவது, “சிஎம் பதவியேற்ற பின்னர் விஜய் மே மாதம் கடைசியில டெல்லிக்கு போனப்ப பிரதமர் மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை மட்டும்தான் பார்க்க முடிஞ்சது..
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க எவ்வளவோ முயற்சி செஞ்சு பார்த்தும் நேரம் கொடுக்கப்படலை.. அதனால அமித்ஷாவை சந்திக்காமலேயே விஜய் டெல்லியில இருந்து சென்னை திரும்பிட்டார்.
அப்புறமாக ஆகஸ்ட் மாதத்துல கோவளத்துல நடந்த தென்னிந்திய மண்டல கவுன்சில் கூட்டத்துக்கு அமித்ஷா வந்திருந்தார்.. அப்பதான் அமித்ஷாவை விஜய் சந்திச்சு பேசியிருந்தார்.
இப்ப கொஞ்ச நாளாக டெல்லி பாஜக தலைமையின் அதிகாரப்பூர்வ சோசியல் மீடியாவில சிஎம் விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சிச்சு பதிவுகள் போடப்பட்டு வருது.. இதுவரைக்கும் தமிழக பாஜக தலைவர்கள் பேசிகிட்டு இருந்ததை ஓவர் டேக் செஞ்சுகிட்டு இருக்காங்க பாஜகவின் நேஷனல் லீடர்ஸ்.. நேத்து கூட சென்னையில பாஜக மேலிட பொறுப்பாளர் ராம் மாதவ், விஜய்யை விளாசிதான் பிரஸ் மீட் கொடுத்தார்.. பாஜகவோட மூவ்ஸ் இப்படி இருக்கும் போதுதான் தமிழகத்தோட சட்டம் ஒழுங்கு பத்தி எல்லா எதிர்க்கட்சிகளும் சரமாரியா கேள்வி கேட்டுகிட்டு இருக்காங்க..
இந்த நிலையிலதான் தமிழ்நாட்டோட ஆளுநர் அர்லேகர் டெல்லியில அமித்ஷாவை சந்திச்சு பேசினார்.. இந்த சந்திப்பில தமிழக சட்டம் ஒழுங்கு பற்றிய அறிக்கையை அமித்ஷாகிட்ட ஆளுநர் கொடுத்திருக்கிறார்னும் சொல்றாங்க..
இப்படி அமித்ஷாவை ஆளுநர் சந்திச்சிருக்கிற நிலையில நாளை மறுநாள் திங்கள்கிழமையன்னைக்கு சிஎம் விஜய் டெல்லிக்கு வர்றாரு.. இத்தனைக்கும் இதுவரைக்கும் டெல்லியில சிஎம் விஜய்க்கு எந்த ஒரு புரோகிராமும் பிக்ஸ் பண்ணலை.. ஆனா திடீர்னு டெல்லிக்கு சிஎம் விஜய் வர இருக்கிறார்..
அமித்ஷாவுடன் ஆளுநர் பேசிகிட்டு இருக்கும் நிலைமையில சிஎம் விஜய் டெல்லி ஏன் வருகிறார்.. எதுக்கு வருகிறார்னுதான் எல்லா கண்களும் ”வெயிட்டிங்”ன்னு சொல்றாங்க ப்ரோன்னு டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.










