வங்கக் கடலில் வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்

By Pandeeswari Gurusamy

|

Published on 15 Nov 2026, 9:53 AM

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

இன்று (நவம்பர் 15) அதிகாலை 5.30 மணி நிலவரப்படி, தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது.

ADVERTISEMENT

இது அந்தமான் தீவின் ஸ்ரீ விஜயபுரத்திலிருந்து (போர்ட் பிளேர்) மேற்கு-தென்மேற்கே 700 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே 860 கி.மீ. தொலைவிலும், விசாகப்பட்டினத்திற்கு தெற்கு-தென்கிழக்கே 1,040 கி.மீ. தொலைவிலும், ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு தெற்கு-தென்கிழக்கே 1,160 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, நவம்பர் 16-ம் தேதி தெற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

தொடர்ந்து நவம்பர் 17-ம் தேதி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் தீவிரப் புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயலுக்கு ஈரான் பரிந்துரைந்த அக்வான் என்ற பெயர் சூட்டப்பட உள்ளது. அதேசமயம் புயல் எந்த பகுதியில் கரையை கடக்கும் என்பதை இதுவரை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel