போலி நூல்கள் கொள்முதல் சர்ச்சை : 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம்

By Pandeeswari Gurusamy

|

Published on 15 Nov 2026, 11:32 AM

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், பெரியார் நூலகம், மதுரை கலைஞர் நூலகத்தில் புத்தக கொள்முதலில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட பெரியார் அறிவுலக நூலகத்திற்கு, தகுதியற்ற கருத்து செறிவற்ற நூல்கள் மற்றும் ஏ.ஐ (AI) மூலம் உருவாக்கப்பட்ட நூல்களைப் போலிப் பதிப்பகங்கள் வாயிலாக வாங்கியதில் பல கோடி ரூபாய் நிதி முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இச்சம்பவத்தில் தவெக திமுக உள்ளிட்ட கட்சிகள் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றன.

ADVERTISEMENT

போலி நூலாசிரியர்களின் பெயரில் போலி பதிப்பகங்கள் வெளியிட்ட நூல்கள் மாநிலத்தின் பல்வேறு நூலகங்களில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் உள்ள நூலகங்களிலும் போலியான நூல்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. புத்தகக் கொள்முதல் முறைகேடு தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் புத்தகக் கொள்முதல் கண்காணிப்புக் குழுவில் உறுப்பினர்களாக இருந்த அண்ணா நூற்றாண்டு நூலக அதிகாரிகள் காமாட்சி, சந்தான கார்த்திகேயன், கலைஞர் நூற்றாண்டு நூலக அலுவலர் தினேஷ்குமார், கோவை பெரியார் அறிவுலக நூலகப் பொறுப்பாளர் சந்தான கிருஷ்ணன், பொது நூலகத் துறை அதிகாரி ஜூலியட் ஆகியோரைப் பணியிடை நீக்கம் செய்து பொது நூலக இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel