இஸ்ரேல் தாக்குதல்: 24 மணி நேரத்தில் 54 பாலஸ்தீனர்கள் பலியான சோகம்!

Published On:

| By Selvam

இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 38,848 பேர்  பலியாகியுள்ள நிலையில், மத்திய காசாவில் இஸ்ரேலின் ராணுவம் தாக்குதல்களை தீவிரப்படுத்தியதால் 24 மணி நேரத்தில் 54 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், 20 பாலஸ்தீன போராளிகளை கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 அன்று தொடங்கிய காசா மீதான இஸ்ரேலின் போரில் குறைந்தது 38,848 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதோடு, 89,459 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும், ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களில் இஸ்ரேலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,139 என மதிப்பிடப்பட்டுள்ளது, ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் காசாவில் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். மத்திய காசாவில் இஸ்ரேலின் ராணுவம் தாக்குதல்களை தீவிரப்படுத்தியதால் 24 மணி நேரத்தில் குறைந்தது 54 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் உக்ரைன், பாலஸ்தீனர்களுக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்பியுள்ளது. இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள உக்ரைன், “பாலஸ்தீன மக்களுக்கு 1,000 டன் கோதுமை மாவை அனுப்பியிருக்கிறோம். பாலஸ்தீனத்துக்காக செய்யும் உதவிகளில் இது முதன்மையானது. இந்த பொருட்கள் ஒரு மாதத்திற்கு 101,000 பாலஸ்தீன குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும்” என தெரிவித்துள்ளது.

பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா.வின் ஏஜென்சி (UNRWA) அதன் 26 சுகாதார மையங்களில் 10 மட்டுமே தற்போது காசா பகுதியில் செயல்பட்டு வருவதாக கூறுகிறது. சவூதி அரேபியா இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களை கண்டித்துள்ளது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: இளமையைத் தக்கவைக்குமா முகத்தில் தடவும் தேங்காய் எண்ணெய்?

கிச்சன் கீர்த்தனா: மணத்தக்காளி வற்றல் குழம்பு

அன்றே கணித்தார் தமிழிசை : அப்டேட் குமாரு

டிஜிட்டல் திண்ணை: ஆட்டம் காணும் ஆளுநர் பதவி.. மோடி, அமித் ஷாவிடம் ஓடிய ஆர்.என்.ரவி – ஸ்டாலின் வைத்த செம்ம ட்விஸ்ட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share