சில நேரத்துல ’அன்றே கணித்தார் போதி தர்மர்’, ’அன்றே கணித்தார் சூர்யா’, ’அன்றே கணித்தார் புரூஸ்லீ’ என்று சில மீம்ஸ் வைரலாகிட்டு இருக்கும்.
இன்னைக்கு ‘அன்றே கணித்தார் தமிழிசை’னு திடீர்னு வைரலாகிட்டு இருந்துச்சு.
என்னானு நண்பன் கிட்ட கேட்டா, லோக்சபா தேர்தல் முடிஞ்சி கொஞ்ச நாளா கடுகடுன்னு இருந்த தமிழிசை ‘இப்போ நெறயா குற்றம்சாட்டப்பட்டவர்கள் பிஜேபில இருக்காங்க’னு ரொம்ப வருத்தப்பட்டு பேட்டி கொடுத்தாங்க.
இன்னைக்கு பாத்தா ஆம்ஸ்ட்ராங் கொலை கேசுல தேடிட்டு இருக்குற வடசென்னை பாஜக மகளிரணி செயலாளர் அஞ்சலையை கட்சில இருந்து பாஜக நீக்கிருக்கு.. அதான் அவங்க சொன்னது உண்மையாகிட்டுனு பேசிட்டு இருக்காங்கனு சொல்றான்.
ஓஹோ அதுதான் விஷயமானு நான் கெளம்பிட்டேன்…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க
ℳsd இதயவன்
சசிகலா செல்வது சுற்றுப்பயணம் அல்ல, சுற்றுலா பயணம் ~ முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
அந்தம்மா முதல்வர் ஆகனும் னு மொட்டை அடிச்சி தீர்மானம் நிறைவேற்றிய நீங்க சொன்னா மறுக்கவா முடியும் ?!
Niranjan kumar
வேட்டி கட்டிவராதே என்றவன்,
ஒரு காலத்தில் கோவணத்திற்கு கூட வழியில்லாதவனின் மகன் தானே???
#ஆடைஅரசியல்
சிறகு
சசிகலாவால் பயனடைந்தவர்கள் என்று யாராவது உள்ளார்களா?~ முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
அந்தா டேபிளுக்கு கீழ போயி பதவி வாங்கி இப்ப பொதுச்செயலாளராக இருக்கிறாரே அவருகிட்ட கேளுங்க ?!
ArulrajArun
இன்ஸ்டா ரீல்ஸ் எடுக்க முயன்று 300 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த இளம் பெண்!- செய்தி
# soldiers Reels வாழ்க்கை real வாழ்க்கையை பாதிக்கும் ன்னு தெரியாம போச்சே
ச ப் பா ணி
நாடகத்தனம் என்பதற்கு சரியான உதாரணம்.. சீரியலில் பெத்த அம்மா ஒவ்வொரு முறையும் மகனை பெயர் சொல்லிக் கூப்பிடுவது.
Kirachand
என்னை யாரும் ஏமாற்ற முடியாது! – சசிகலா
ஆமாமா…பரப்பன அக்ரஹாரா ஜெயிலரையே ஏமாற்றி ஷாப்பிங் போன உங்களை ஏமாற்ற முடியாதுதான்!
Sasikumar J
கல்யாணம் ஆகி புதுசுல ஆடி மாதம் மனைவியை அவங்க அம்மா வீட்டுக்கு அழைச்சிட்டு போய்ட்டாங்கன்னு பிரிந்து வருத்தப்பட்டதும்…!
அதே அதுக்கு அடுத்த அடுத்த வருடம் ஆடி மாதத்திற்கு அழைச்சிட்டு போகலையே அப்படினு வருத்தப்பட்டதும் ஒரே ஆளா…!!
#ஆடி_மாத_பிறப்பு
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
பானிபூரி, தெருவோர கடைகளுக்கு மருத்துவ சான்று மற்றும் பதிவு உரிமம் கட்டாயம் பெற வேண்டும் – உணவு பாதுகாப்பு துறை.
# அப்படி எல்லாம் சுத்தமா மெய்ன்டெயின் பண்ணா, பானி பூரி டேஸ்ட்டாவே இருக்காதுன்னு பக்கத்து டேபிள்ல ரீல்ஸ் பண்ணிட்டு இருந்தவங்க சொன்னாங்க..
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
பாஜகவில் இருந்து அஞ்சலை நீக்கம்!