PHOTO GALLERY: இலங்கையில் பிரபாகரன் வீட்டை நேரில் பார்வையிட்ட திருமாவளவன்!

By Mathi

|

Published on 17 Nov 2026, 11:06 AM

Prabhakaran-Thirumavalavan

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. இன்று (நவம்பர் 17) நேரில் பார்வையிட்டார்.

இலங்கையின் மூத்த தமிழ் அரசியல் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் (வயது 69) உடல்நலக் குறைவால் நவம்பர் 14-ந் தேதி காலமானார். சிவாஜிலிங்கத்தின் இறுதிச் சடங்குகள் யாழ்ப்பாணம் மாவட்டம் வல்வெட்டித்துறையில் நேற்று (நவம்பர் 16) நடைபெற்றன. இதில் பங்கேற்பதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இலங்கை சென்றார்.

ADVERTISEMENT

வல்வெட்டித்துறையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த சிவாஜிலிங்கத்தின் உடலுக்கு திருமாவளவன் இறுதி அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கும் திருமாவளவன் ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் நடைபெற்ற நினைவஞ்சலிக் கூட்டத்திலும் திருமாவளவன் பங்கேற்றார். இந்த நிகழ்வில் இலங்கையின் பல்வேறு தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து வல்வெட்டித்துறையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீடு இருந்த இடத்தையும் திருமாவளவன் நேரில் சென்று பார்வையிட்டார். இந்த இடம் தற்போது கட்டிடங்கள் இல்லாமல் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. இலங்கைக்கு செல்லும் வெளிநாட்டு பயணிகள் பிரபாகரன் பிறந்து, வளர்ந்து பின்னர் கைவிடப்பட்ட இந்த இடத்தை பார்வையிட்டு வருகின்றனர்.

படங்கள்

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel