நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட போது என்னுடன் யாரும் இல்லை என நடிகை மனிஷா கொய்ராலா வருத்தம் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் 90களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் மனிஷா கொய்ராலா. பம்பாய் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர், இந்தியன், முதல்வன், ஆளவந்தான் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
அடுத்தடுத்து தொடர்ந்து பல மொழி படங்களில் நடித்து வந்த மனிஷா கொய்ராலா புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை மேற்கொண்டு வந்த இவர், அதிலிருந்து மீண்டு, தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.
அந்தவகையில், மனிஷா கொய்ராலா சமீபத்தில் வெளியான “ஹீரமண்டி: தி டைமண்ட் பஜார்” வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், புற்றுநோய் பாதிக்கப்பட்டு இருந்தபோது சந்தித்த சில அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், “இந்த பயணம் எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. அனைவரும் உடல் ஆரோக்கியத்தின் மீது மிகுந்த கவனமாக இருங்கள். எனக்கு நிறைய உறவினர்கள், பெரிய குடும்பம் இருக்கிறது.
அனைவருமே வசதி படைத்தவர்கள்தான். ஆனால், நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது, என்னுடன் யாரும் இல்லை, அனைவரும் விலகி விட்டார்கள். என் நண்பர்கள் கூட அப்போது என்னுடன் இல்லை.
அச்சமயத்தில் என்னுடன் இருந்தது என் பெற்றோர், எனது சகோதரர், சகோதரிகள்தான். புற்றுநோய் பாதித்த எனக்கு பல விசயங்கள் நடந்தன. நோய் பாதிப்பிற்கு முன் இருந்ததுபோல, தற்போது என் உடல் இல்லை.
என்னால் இப்போது எந்த வேலையையும் செய்ய முடியவில்லை. இப்போதும் நான் மன அழுத்தத்தோடுதான் இருக்கிறேன். அதே வலியோடுதான் எனது வேலைகளை செய்கிறேன்” என வருத்தத்துடன் மனிஷா கொய்ராலா பேசி உள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழக அரசை எதிர்த்து போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு – காரணம் இதுதான்!
இஸ்லாமிய பெண்களின் புர்காவை விலக்கி சோதனை செய்த பாஜக வேட்பாளர்: தேர்தல் ஆணையம் ஆக்ஷன்!