இஸ்லாமிய பெண் வாக்காளர்களின் அடையாள அட்டையை சோதனை செய்தது தொடர்பாக பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இன்று (மே 13) 4ஆம் கட்ட நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. தேர்தல் நடைபெற்று வரும் தெலுங்கானாவின் ஐதராபாத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுபவர் மாதவி லதா.
இவர் தேர்தல் பிரச்சாரத்தின்போது, மசூதியை நோக்கி வில் அம்புகளை ஏவுவதுபோல் செய்கை செய்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பான காணொலிகள் இணையத்தில் வைரலான நிலையில், இதனை பல தரப்பினர் கண்டித்தனர்.
மேலும், மாதவி லதா மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பலர் கோரிக்கை விடுத்தனர். இதற்கு மாதவி லதா, வீடியோவால் யாரின் மனமாவது புண்பட்டு இருந்தால், நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் அனைவரையும் மதிக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று (மே 13) ஐதராபாத் தொகுதியில் தேர்தல் நடைபெற்று வருகிறது. அங்குள்ள ஒரு வாக்குசாவடியில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களிடம் பாஜக வேட்பாளர் மாதவி லதா அவர்களது அடையாள அட்டையை வாங்கி சரிபார்த்தார். வாக்காளர் அடையாள அட்டையில் இருப்பவர்கள்தான் வாக்களிக்க வந்திருக்கிறார்களா என்பதற்காக அப்பெண்கள் அணிந்திருந்த புர்காவை விலக்கச் சொல்லி அவர்கள் முகத்தையும் பார்த்தார்.
#WATCH | Telangana: BJP candidate from Hyderabad Lok Sabha constituency, Madhavi Latha visits a polling booth in the constituency. Voting for the fourth phase of #LokSabhaElections2024 is underway. pic.twitter.com/BlsQXRn80C
— ANI (@ANI) May 13, 2024
இதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலான நிலையில், பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக மலக்பேட் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக, அம்மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது 1712C, 186, 505(1)(C) of IPC மற்றும் பிரிவுகள் 132 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்கீழ், மலக்பேட் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சென்னையில் தோனிக்கு கோவில்: அம்பத்தி ராயுடு சொன்ன நச் கமென்ட்!