கம்ப்யூட்டரில் நீண்ட நேரம் பணிபுரியும் சாஃப்ட்வேர் ஊழியர்களில் பலருக்கு இடுப்பு மற்றும் முதுகுவலி தற்போது அதிகம் வருகிறது.
நவீன வாழ்க்கைச் சூழலில் தரையில் அமர்வதற்கான வாய்ப்பே இல்லாமல் போய்விட்டதுதான் இதற்கான முக்கியமான காரணமாக உள்ளது.
காலையில் கட்டிலில் இருந்து எழுந்து பல் துலக்கி, வெஸ்டர்ன் டாய்லெட்டைப் பயன்படுத்தி, பின்னர் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டு, கார் அல்லது பைக்கை எடுத்துக்கொண்டு அலுவலகம் சென்று சேரில் அமர்ந்து கம்ப்யூட்டரில் வேலை பார்த்து,
பிறகு மாலையில் வீடு திரும்பி சோபாவில் அமர்ந்து டிவி பார்த்து, டைனிங் டேபிளில் அமர்ந்து இரவு உணவைச் சாப்பிட்டு, கடைசியாக கட்டிலில் படுத்துத் தூங்குவது என்றே தினசரி வாழ்க்கை அமைவதால் தரையில் உட்காருவதற்கு வாய்ப்பே கிடைப்பதில்லை.
நம் உடலில் உள்ள மூட்டு இணைப்புகளை நாம் பயன்படுத்துவதேயில்லை என்பதுதான் உண்மை.
இடுப்பைக்கூட அதிகபட்சமாக 90 டிகிரி வரைக்கும்தான் பயன்படுத்துகிறோம். இதனால் ஜாயிண்ட்ஸ் எனப்படும் மூட்டு இணைப்புகளின் இயங்கு திறனின்அளவு (Range of motion) மிகவும் குறைந்து போய்விடுகிறது.
எந்த ஒரு வேலையும் மெஷின்போல ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாகத் தொடர்வதுபோல இருந்தால், அவ்வப்போது ஓரிரு நிமிடங்கள் பிரேக் எடுத்து நடக்க வேண்டும்.
குறிப்பாக, நின்றுகொண்டே இருக்கிறீர்கள் என்றால் உட்கார வேண்டும். உட்கார்ந்துகொண்டே இருந்தால் அவ்வப்போது எழுந்து நடக்க வேண்டும்.
இப்படி அவ்வப்போது உங்கள் உடலின் நிலையை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். இதன்மூலம் வேலை செய்யாத தசைகள், ரத்த ஓட்டம் குறைவாக உள்ள இடங்கள் ஆகியவற்றிலெல்லாம் ரத்த ஒட்டம் சீராகப் பாயும். மூட்டு இணைப்புகளும் சரியாக வேலை செய்யும்.
உங்களாலும் தொடர்ந்து வேலை செய்ய முடியும். அப்படி இல்லாமல் தொடர்ந்து ஒரே பொசிஷனில் இருந்துகொண்டு நீண்ட நேரம் வேலை செய்தால், அப்போது பெரிதாகத் தொந்தரவு எதுவும் இருக்காது. ஆனால், வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபிறகு உங்களுக்கு இடுப்பு மற்றும் மூட்டு இணைப்புகளில் வலி உண்டாகும்.
வாழ்வியல் மாற்றங்களால் இடுப்புவலி போன்ற பிரச்சினைகள் வந்தால் அது மீண்டும் வராமல் தடுக்க, மருத்துவரை அணுகி அதன் காரணங்களைக் கண்டறிந்து அதற்கேற்ப முறையான சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்: நாட்டுக்கோழி முட்டையில்தான் சத்துகள் அதிகம் உள்ளதா?
ஆவடி மாநகராட்சி லைப்ரரில அவ்ளோ வசதி இருக்குது… நீட் தேர்வில் பாஸான மாணவர் வைக்கும் கோரிக்கை!
80 டன் குண்டு வீசி ஹிஸ்புல்லா இயக்க தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொலை- இஸ்ரேல் வெறியாட்டம்!