ஆவடி மாநகராட்சி லைப்ரரில அவ்ளோ வசதி இருக்குது… நீட் தேர்வில் பாஸான மாணவர் வைக்கும் கோரிக்கை!

தமிழகம்

ஆவடியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் ஆவடி மாநகராட்சிக்கு சொந்தமான லைப்ரரியில் படித்து நீட் தேர்வில் பாஸாகி அசத்தியுள்ளார்.

நீட்  எனப்படும் National Entrance Cum Eligibilty Test என்பது இந்திய மாணவர்கள் மருத்துவத் துறையில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு   நடத்தப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளை படிப்பதற்கும் நீட் தேர்வு அவசியம்.

நீட் தேர்வு அறிமுகமான புதிதில் மாணவ மாணவிகளிடத்தில் ஒரு வித பயம் இருந்தாலும் தற்போது அந்த நிலை மாறி வருகிறது. சாதாரண கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் கூட நீட் தேர்வில் எளிதாக பாஸாகி வருகிறார்கள். அந்த வகையில் ஆவடி லைப்ரரியில்  படித்து மாணவர் ஒருவர் நீட் பாஸாகி அசத்தியுள்ளார்.

ஆவடி பகுதியை சேர்ந்த முனிவேலு மற்றும் பிரியா தம்பதியின் மகன் கிரிஷ்வர் அங்குள்ள சுதர்சனம் வித்யாலாயாவில் படித்து வந்தார். இவருக்கு டாக்டராக வேண்டுமென்பது நீண்ட நாள் ஆசை.  இதனால்,  கோச்சிங் சென்டரிலும் பயிற்சி எடுத்து வந்தாலும், ஆவடி மாநகராட்சிக்கு சொந்தமான லைப்ரரியில் கிடைத்த புத்தகங்களை பயன்படுத்தி நீட் தேர்வுக்கு தயாரானார்.

இந்த நிலையில், நீட் தேர்வில் 626 மதிப்பெண் எடுத்து பாஸ் செய்துள்ளார். இவருக்கு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்க  சீட் கிடைத்துள்ளது.

இந்த மாணவருக்கு ஆவடி கமிஷனர் அலுவலகத்தில் பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது.  இது குறித்து கிரிஷ்வர் கூறுகையில், “ஆவடி மாநகராட்சிக்கு சொந்தமான இந்த லைப்ரரியில் அனைத்து விதமான புத்தகங்களும் உள்ளன. படிப்பதற்கு அமைதியாகவும் இருக்கும். எனவே, நீட் தேர்வு உள்ளிட்ட எந்த தேர்வுக்கு தயாரானாலும் இங்கு வந்து படிப்பது நல்லது” என்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 ஹிட்லர்: திரை விமர்சனம்!

5000 பேருக்கு வேலைவாய்ப்பு : டாடா வாகன உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டிய ஸ்டாலின்

+1
2
+1
0
+1
0
+1
0
+1
1
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *