கொட்டும் மழை! கர்நாடகா அணைகளில் நீர்மட்டம் ’இவ்வளவு’ இருக்கிறதே!

Published On:

| By Mathi

Heavy Rain: Water Level in Karnataka Dams

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை கொட்டித் தீர்ப்பதால் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. காவிரியில் கர்நாடகா நீர் திறந்துவிடக் கூடிய கபினி அணையின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3,500 கன அடிநீரை 15 நாட்களுக்கு காவிரியில் கர்நாடகா அரசு திறந்துவிட வேண்டும் என்பது காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு. இதனை கர்நாடகா முதல்வர் டி.கே. சிவகுமார் ஏற்க மறுத்து வருகிறார். இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய போவதாகவும் கர்நாடகா தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதனிடையே கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை கொட்டி வருவதால் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,504 கன அடியாக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

காவிரியின் குறுக்கே குடகு மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள ஹாரங்கி, ஹேமாவதி அணைகளுக்கும் நீர்வரத்து அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. அணைகளின் நீர்மட்ட விவரங்கள் (சுருக்கம்):

அணை பெயர்மொத்த கொள்ளளவு (அடி)தற்போதைய நீர் இருப்பு (அடி)
கிருஷ்ணராஜ சாகர் 124.8093.55
கபினி65.0056.28
ஹாரங்கி129.00127.55
ஹேமாவதி117.00100.98
மேட்டூர் (தமிழ்நாடு)120.0073.82

மேட்டூர் அணை

மேட்டூர் அணையில் பொதுவாக 90 அடிக்கு மேல் நீர் இருப்பு இருந்தால்தான் காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படுவது வழக்கம். நடப்பாண்டில் கர்நாடகா காவிரி நீரை திறந்துவிட மறுப்பதால் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படவில்லை.

ADVERTISEMENT

விஜய்க்கு கர்நாடகா முதல்வர் வேண்டுகோள்

இதனிடையே கர்நாடகாவின் பெங்களூருவில் ஆகஸ்ட் 3-ந் தேதி நடைபெற இருந்த காவிரி பேச்சுவார்த்தைக்கு முதல்வர் விஜய் வர வேண்டாம் என அம்மாநில முதல்வர் டி.கே. சிவகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கர்நாடகாவில் ஆகஸ்ட் 13-ல் பந்த்

மேலும் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிடக் கூடாது என்பதை வலியுறுத்தி ஆகஸ்ட் 13-ந் தேதி கர்நாடகா முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்த கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

ஜனநாயகன் படத்துக்கு எதிர்ப்பு

தமிழக முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தை கர்நாடகா திரையரங்குகளில் வெளியிட கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து திரையரங்குகளில் ஜனநாயகன் படம் வெளியிடுவது நிறுத்தப்பட்டுள்ளது. ஜனநாயகன் பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share